animated gif how to

ஐ.தே.க. தலைவராக ரணில் மீண்டும் தெரிவு (பெற்ற வாக்குகள் இணைப்பு)

December 19, 2011 |

December 19, 2011.... AL-IHZAN Local News

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் தலைமைப் பதவி உட்பட ஏனைய பிரதான பதவிகளுக்கான வாக்கெடுப்பு கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. 
வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

பிரதித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு தயா கமகேயும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 


பெற்ற வாக்குகள்
தலைவர் பதவிக்கான போட்டியில்...
ரணில் விக்கிரமசிங்க - 74 வாக்குகள்
கரு ஜயசூரிய - 24 வாக்குகள்

பிரதித் தலைவர் பதவிக்கான போட்டியில்...
சஜித் பிரேமதாச - 52 
ரவி கருணாநாயக்க - 44


தேசிய அமைப்பாளர் பதவிக்கான போட்டியில்...
தயா கமகே - 56 வாக்குகள்
தயாசிறி ஜயசேகர - 36 வாக்குகள்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!