animated gif how to

இஸ்லாமிய நலன் பேணும் நாடாக பாகிஸ்தானை மாற்றுவேன் – இம்ரான் கான்

December 27, 2011 |

December 27, 2011.... AL-IHZAN World News

இஸ்லாமாபாத்: தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழலையும், அநீதியையும் துடைத்தெறிந்துவிட்டு பாகிஸ்தானை உண்மையான இஸ்லாமிய நலன் பேணும் நாடாக மாற்றுவேன் என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாக்.கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

துறைமுக நகரமான கராச்சியில் கட்சி ஏற்பாடுச்செய்த பிரம்மாண்ட பேரணியில் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்தினார் அவர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனர். அடுத்த தேர்தலில் பாகிஸ்தான் அரசியலில் சக்தியாக மாறுவார் என எதிர்பார்க்கப்படும் இம்ரான் கானின் அண்மைக்கால பேரணிகளைவிட பெரியது என கராச்சி பேரணியை ஊடகங்கள் மதிப்பிடுகின்றன.

ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளை முற்றிலும் அகற்றும் ஆட்சிதான் தெஹ்ரீக்-இ-இன்ஸாபின் ஆட்சி அமையும். ஏழையும், பணக்காரனும் இடையேயான பாரபட்சம் இல்லாமல் ஆகும் என இம்ரான்கான் தனது உரையில் கூறினார்.


ஊழலுக்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு எதிராகவும் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள இம்ரான்கானின் நிலைப்பாடு மக்களிடையே செல்வாக்கை அதிகரிப்பதாக செய்திகள் கூறுகின்றன. பொருளாதார அராஜகமும், பாதுகாப்பு இன்மையும் கானின் அரசியல் முன்னேற்றத்தை எளிதாக மாற்றியுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!