animated gif how to

சவூதி அரேபியாவில் காத்தான்குடி முஸ்லிம் இளைஞனின் ஜனாஸா கண்டெடுப்பு!

December 14, 2011 |

December 14, 2011.... AL-IHZAN World News

சவூதி அரேபியாவில் காத்தான்குடியைச் சேர்ந்து 22 வயதுடைய அப்துல் கப்பார் அஷ்ரப் என்பவருடைய ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 22 நாட்களுக்கு முன்னர் இவர் சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு சென்றுள்ளார். சாரதி தொழில் வாய்ப்புப் பெற்று அங்கு சென்றுள்ள இவர் கடந்த இரு நாட்களாக வேலைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் இவர் தங்கியிருந்த அறை உடைத்துப் பார்க்கப்பட்டபோதே அவரின் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பான முழுவிபரம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென மரணமானவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!