animated gif how to

பத்துப் பேர் படு கொலை செய்யப்பட்டு பத்து வருடங் களாகியும் படிக்காத பாடங்கள்

December 05, 2011 |

December 05, 2011.... AL-IHZAN Local News

ஆக்கம்: அபூ அய்யூப் முஹம்மது.
இந்நாள் வரை உலக வரலாற்றின் ஜனனாயகத் தேர்தல் வன்முறைகளின் உச்சத்தில் பார்க்கப்படுகின்ற உடதலவின்ன படுகொலை நிகழ்ந்து இன்றைக்கு (2011 டிஸம்பர்-05) பத்து வருடங்களாகின்றன. தாம் கொண்ட கொள்கைக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த மடவள பஸாரைச் சேர்ந்த பத்து வாலிபர்கள் தான் இந்த கொலைக் களத்தில் பரிதாபமாக பலியனவர்கள்.


இந்தப் படு கொலையைத் திட்டம் போட்டு செய்தவர்கள், தனக்கு வாக்கு வேண்டும் என்பதற்காக அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்து சகல மா பாதகங்களையும் புரிந்து அரசியல் செய்து வரும் கொலை வெறி பிடித்தவர்களாகும்...

2001 டிஸம்பர் மாதம் 6ம் நாளில் எமது ஊரை அடைந்த சோகமும், அமைதியும், வடிந்த கண்ணீரும், கவலையும் எமது எதிரிக்கும் வரக்கூடாது! என்று ஆசை வைப்போம். இந்த சோகத்தை சுமக்க முடியாமல் சுமந்த அந்தப் பத்துக் குடும்பங்களுக்கும் பொறுமையையும் காப்பையும் இந்நாள் வரை வழங்கிய வல்லவன் அல்லாஹ்வுக்கு முதலாவதாகவும் அடுத்ததாக தம்மால் முடிந்த வழிகளால் உதவிகளை செய்த, செய்து வருகின்ற சகோதர நெஞ்சங்கள் சகலருக்கும் அல்லாஹ் அருள்பாளிப்பானாக!


நம் நாட்டின் பல கட்சி அரசியலில் சிந்தனைகளால் மோதிக் கொள்வதை விட ஆயுதங்களால் மோதிக் கொள்வது சரளமாகி விட்ட இந்தக் காலத்தில், ‘இதை விட இழக்க முடியாது’ என்ற உச்சத்தை அடைந்த படுகொலையிலிருந்தேனும் நமது சமூகம் தேவையான பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுக் கொண்டதா? என்ற கேள்வியை நம் நாட்டின் சிந்தனை வாதிகளிடம் கேட்க விரும்புகிறேன்.


எந்த அளவையாலும் அளந்து கணிக்க முடியாத பல உயிர்களைப் பரி கொடுத்து விட்டோம். இதிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொண்டோம்? என்ற கேள்வியை எமது ஊர்களில் தேர்தல் காலங்களில் மட்டும் உலா வரும் அரசியல் வாதிகளிடம் கேட்க விரும்புகிறேன்.


இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாமிய உணர்வு மிக்கவர்கள் என்பதால்த் தான் முஸ்லிம் என்ற பெயரோடு வந்த கட்சிக்கு பேராதரவைத் தந்தார்கள்.இந்த இஸ்லாமிய உணர்வுகளை இஸ்லாமிய சிந்தனைகளின் படி வழி நடத்தும் பணி நடை பெற்றிருந்தால் ஏதாவது கற்றுக் கொண்டோம் என்று கவலையைப் போக்கியிருப்போம்.


அடுத்தவன் கருத்தை அழகாக செவிசாய்க்கின்ற பண்பாடும் அடுத்தவனின் வாதத்துக்கு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பதில் கொடுக்கின்ற நாகரீகமும் சமூகத்தில் வளர்ந்திருந்தால் அல்லது வளர்க்கப்பட்டிருந்தால் கண்ணீரையும் கவலையையும் துறந்திருப்போம்.




நம் சமூகத்தின் தேவைகளை அடையாளப் படுத்தி, அதில் முன்னுரிமை பெறும் அம்சங்களை வரிசைப் படுத்தி, கட்சி பேதங்களின்றி ஒரு சமூகம், ஒரு போராட்டம் என இயங்க வேண்டுமே என்ற சிந்தனையைப் பெற்றிருந்தாலும் ஓரளவு நிம்மதியைக் கண்டிருப்போம்.


‘கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, நீதி கிடைக்கும் வரை சாத்வீக வழியில் போராடுவோம்,’ என்ற கொள்கை வாதிகள் சிலரையாவது கட்சிகள் உருவாக்கியிருப்பின் ஒரு கணம் மகிழ்ந்திருப்போம்.


‘சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும், சாந்தி சமாதானத்தை அடையவும் ஆயுதங்களுக்கு முன் அழகிய சிந்தனை தான் வேண்டும்’ என்ற யதார்த்தத்தை நம் மக்களும் அரசியல் வாதிகளும் ஏற்றுக் கொண்டிருந்தால் விசனங்கள் விலகிருக்குமே!


மேற்கிலிருந்து வந்த கொள்கைகளை மேற்குலகமே மறுக்கின்ற நம் காலத்தில் நம்மிடமுள்ள இஸ்லாமிய வாழ்வு தான் நம்மிடமுள்ள சீரழிந்த அரசியலுக்கும் பொருளியலுக்கும் சமூகவியலுக்கும் ஏக மாற்று வழி என்பதை ஏற்கத் தயங்குவது ஏன் தானோ!


தூய இஸ்லாமிய உணர்வோடு வாழும் வாலிபர்கள் ஏராலம் இருக்கின்றார்கள். ஆனால் இந்த வாலிபர்களை வழி நடத்தும் தலைவர்கள் தான் சிந்தனைத் தெளிவின்றி கட்சி விட்டு கட்சி தாவிக் கொண்டு பட்டம் பதவியென்று இச்சையோடு வாழ்கிறார்கள். இவர்களின் சிந்தனை மாறாத வரை மடவளை பஸாரின் பத்துப் பேர் படுகொலை மூலம் நம் சமூகம் கற்றுக் கொண்டது மிகக் குறைவு தான்.

1 கருத்துரைகள் :

Anonymous said...

Why the hell are you all still going behind Mattu Congress. Mattu Congress was started by a racist bastard stating he wanted eastern leadership. You fools in the central Sri Lanka who always took intelligent decisions also went behind that bastard. It is a good lesson for you all.

At least kick those bastards out when they come to your village next time.

Post a Comment

Flag Counter

Free counters!