animated gif how to

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

December 05, 2011 |

December 05, 2011.... AL-IHZAN World News

தெஹ்ரான்: விமான எல்லையை மீறிய அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஈரானில் ஆப்கானிஸ்தானோடு ஒட்டிய பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ அதிகாரியை மேற்கோள்காட்டி ப்ரஸ் டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்.க்யூ-170 உளவு விமானத்தை ராணுவம் சுட்டுவீழ்த்தியது. துப்பாக்கியால் சுட்டதில் ஓரளவு சேதமடைந்த விமானம் தற்பொழுது ஈரான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அணுசக்தி திட்டத்தின் பெயரால் சர்வதேச அளவில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவரும் சூழலில் அந்நாட்டின் உளவு விமானம் ஈரானின் எல்லையில் அத்துமீறியுள்ளது. ஆனால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்கா பதிலளிக்கவில்லை. ஏற்கனவே கடந்த ஜூலை மாதமும் அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியிருந்தது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!