animated gif how to

இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி மாலைதீவில் பேரணி

December 25, 2011 |

December 25, 2011.... AL-IHZAN World News

மாலி: மாலைதீவில் இஸ்லாமிய சட்டத்  திட்டங்களை அமுல்படுத்தக்  கோரியும்,  இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை முடிவுக்கு கொண்டுவரவும் மாலைதீவின்  தலைநகரான மாலியில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.


பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும், முக்கிய எதிர்கட்சியான அதாலத் கட்சியும் இணைந்து இந்த  பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இஸ்லாமிய ஷரீஅத் (சட்டத்திட்டங்கள்) அமைதிக்கு சமமானது என எழுதப்பட்ட அட்டைகளை பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் உயர்த்தி  பிடித்திருந்தனர்.

இஸ்ரேலுக்கு நேரடியான விமானப்போக்குவரத்தை நிறுத்தவேண்டும், மதுபானத்திற்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்த மக்கள், அதிபர் முஹம்மது நஷீத் ஷரீஅத் சட்டங்களுக்கு மதிப்பு அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்கள்.


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை  ஈர்ப்பதற்காக அதிபர், மதுபானத்திற்கும், விபச்சாரத்திற்கும் மெளன  அனுமதியை வழங்கியுள்ளதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.


இதற்கிடையே ஒரு பிரிவினர் அதிபருக்கு ஆதரவாகவும் போராட்டம்  நடத்தினர்.ஆனால், இஸ்லாத்தின் நடுநிலை நிலைப்பாட்டை கடைப்பிடிக்க  வேண்டும்  என அதிபரின் அலுவலக செய்திக்குறிப்பில் கோரிக்கை  விடுக்கப்பட்டது.


நாட்டில் வளர்ச்சி சாத்தியமாக வெளிநாட்டு முதலீடு தேவையாகும் என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!