animated gif how to

க.பொ.த. சாதாரண தர பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பம்

December 11, 2011 |

December 11, 2011.... AL-IHZAN Local News

5,31,000 பரீட்சார்த்திகள் 
3,921 நிலையங்கள்
நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவிருக்கும் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் 5 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.


பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சா/தரப் பரீட்சையில் கடந்த காலங்களை விடக் கூடுதலான மாணவர்கள் இம்முறை தோற்றுவதாகத் அவர் தெரிவித்தார். இம்முறை நடைபெறும் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3 இலட்சத்து 85 ஆயிரம் பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேரும் தோற்றவுள்ளனர். 

கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 22 ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள் மேலதிகமாகத் தோற்றுகின்றனர்.இவர்களுக்காக நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 921 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்குமான பாதுகாப்பு அந்தந்தப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும், பரீட்சை நடைபெறும் நாட்களில், பரீட்சை நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகளில் பரீட்சை எழுதும் மாணவர்களைத் தவிர வேறெந்த மாணவர்களும் பாடசாலைக்களுக்குச் செல்லவேண்டாம் எனப் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.


அதேநேரம், 532 பரீட்சை மத்திய நிலையங்களும் 93 விடைத்தாள் திருத்தும் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இது இவ்விதமிருக்க 3 ஆம் தவணைக்காக நேற்றைய தினம் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!