animated gif how to

A/L பரீட்சையில் காத்தான்குடி மாணவர்கள் சாதனை (படம் இணைப்பு)

December 29, 2011 |

December 29, 2011.... AL-IHZAN Local News

வெளியிடப்பட்டுள்ள கல்விப்பொதுத்தராதர உயர் தர பரீட்சை முடிவுகளின் படி காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் அமீர் அலி அப்துல் நாபிஹ் வர்த்தகப்பிரிவில் மூன்று ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 29 வது இடத்தினையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இம் மாணவன் பாகவி மௌலவி என அழைக்கப்படும் மௌலவி அமீர் அலியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவிகளின் படி காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவி முகம்மது அனஸ் ஸீனா ஷிபா விஞ்ஞானப்பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாமிடத்திலும் தேசிய மட்டத்தில் 36 வது சித்தி பெற்றுள்ளார். இவர் சுப்பர் மெரிட் எனப்படும் தேசிய ரீதியிலான தெரிவு அடிப்படையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்.


ஆங்கில ஆசிரியர் ஆர்.ரி.எம். அனஸ் மற்றும் காத்தான்குடி மீரபாலிகா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் ஜனாபா உம்மு பரிதா அனஸ் ஆகியோரின் புதல்வியான மேற்படி ஷிபா மாவட்டத்தில் 2 வது இடத்தினை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


காத்தான்குடி ஜாமியதுஸ் சித்தீக்கியா மகளிர் அரபுக் கல்லூரியில் பாடநெறியைப் பூர்த்தி செய்த மௌலவியாவான  இந்த மாணவி 2008ம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையிலும் 9 பாடங்களிலும் ஏ சித்தியினை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றதுடன் 2002ம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றிருந்தார்.


இந்த மாணவி அகில இலங்கை ரீதியாக நடை பெற்ற தமிழ் தினப்போட்டியிலும் பங்கு பற்றி தங்கப்பதக்கம் பெற்றதுடன் தேசிய மட்டத்தில் பௌதீகவியல் ஒலியம்பியாட் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுள்ளார் அத்தோடு பேராதனை பல்கலைக்கழகம் விஞ்ஞான பீடம் நடாத்திய உலக சத்துணவு போட்டியில் பங்கு கொண்டு முதலாமிடத்தையும் பெற்றுள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!