November 29, 2011.... AL-IHZAN Local News
-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் காத்தான்குடியில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. ஜமாஅத்தின் உயர் அங்கத்தவர்கள் ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வில் ஜமாஅத்தின் எதிர்கால செயற்பாடுகள், வரவுசெலவுத்திட்டம் போன்றவை ஆராயப்பட இருப்பதுடன் ஊரின் முக்கியஸ்தர்களுடனான பிரமுகர்கள் அமர்வு எனும் தலைப்பிலான நிகழ்வொன்றும் இடம்பெற இருக்கின்றது.
இவ்வொன்றுகூடலில் ஜாமியா நளீமியாவின் அகார் முகம்மத், ஹஜ்ஜுள் அக்பர் மற்றும் மின்ஹாஜ்(இஸ்லாஹி) ஆகியோருடன் வெளிநாட்டுப்பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி காத்தான்குடி பிரிவின் பொறுப்பாளர் ஏ.எல்.தாஜ் முஹம்மத் தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :
Post a Comment