animated gif how to

எகிப்தில் தீவிர வாக்குப்பதிவு

November 29, 2011 |

November 29, 2011.... AL-IHZAN World News

கெய்ரோ: ராணுவ ஆட்சிக்கு எதிராக தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் தொடரும் வேளையில் எகிப்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் துவங்கியுள்ளது.ஜனநாயகரீதியிலான போராட்டத்தை தொடர்ந்து ஹுஸ்னி முபாரக் பதவி விலகியதை தொடர்ந்து நடக்கும் முதல் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டமான நேற்று அதிகமாக வாக்குகள் பதிவானதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முடிவுகள் வருகிற புதன்கிழமை வெளியாகும்.

வாக்குச்சீட்டுகள் உரிய நேரத்தில் சில இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு கால தாமதம் ஆகியதை தொடர்ந்து வாக்குப்பதிவு சற்று தாமதமாக துவங்கினாலும் பின்னர் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றது.வாக்குப்பதிவு தாமதமாக துவங்கிய பகுதிகளில் வாக்குப்பதிவிற்கான கால அளவு நீட்டப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் தடையை மீறி நோட்டீஸ் வழங்கியதால் மோதல் உருவானது...

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் வேளையில் வாக்குப்பதிவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2012-ஆம் ஆண்டு மார்ச் வரை 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். ஏறத்தாழ 50 பதிவுச்செய்த கட்சிகள் போட்டியிடும் தேர்தலில் முதல் கட்டமாக 168 பேர் தேர்வுச்செய்யப்படுவர். மீதமுள்ளவர்கள் அடுத்த கட்ட தேர்தல்களில் தேர்வுச்செய்யப்படுவர். இதற்கிடையே எகிப்தில் நடந்துவரும் மோதல்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் செயல்படுவதாக எகிப்தின் ராணுவ தலைவர் ஹுஸைன் தன்தாவி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 10 தினங்களாக தஹ்ரீர் சதுக்கத்தை மையமாக கொண்டு நடக்கும் போராட்டத்தில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தன்தாவி பதவி விலக எதிர்ப்பாளர்கள் கோரிக்கை எழுப்பி போராட்டம் நடைபெறுகிறது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!