November 17, 2011.... AL-IHZAN World News
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்த போது, சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவதற்காக வந்த அப்துல்கலாமிடம் நியூயார்க் விமான நிலையத்தில்முதலில் ஒரு தடவை சோதனை நடத்தினார்கள்.
விமானக் கதவுகள் மூடப்பட்டு, புறப்படுவதற்கு தயாரான நேரத்தில் பாதுகாப்பு வீரர்கள் 2 பேர் வந்து ஏர்இந்தியா விமானத்தின் கதவை திறக்க உத்தரவிட்டனர். பிறகு விமானத்துக்குள் சென்று அப்துல்கலாமின் பாதணியை கழற்றச் செய்து சோதனையிட்டனர். ஏர்இந்தியா விமான ஊழியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் அத்துமீறி நடந்து கொண்டனர். இந்தியா சார்பில் இதற்கு கண்டனம் விடுக்கப்பட்டதும், அமெரிக்கத் தூதரகம் தனது வருத்தத்தைத் தெரிவித்தது...
இதற்கிடையே அப்துல் கலாமிடம் அநாகரீகமாக நடந்து கொண்டவர்கள் யார் என்று அமெரிக்க மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். நியூயார்க் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் தான் இதற்கு காரணம் என்று தெரிய வந்தது. அவர்கள் மீது அமெரிக்க இராணுவம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

0 கருத்துரைகள் :
Post a Comment