November 27, 2011.... AL-IHZAN Local News
Lankamuslim: இலங்கையின் போக்குவரத்துக்கு துறையில் வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தப் போகும் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார். கொழும்பையும் காலியையும் இணைக்கும் இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை இதுவாகும் இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைத்துள்ளார். இஸ்லாமிய புத்தாண்டான இன்று இலங்கை போக்குவரத்துக்கு துறையில் வரலாற்று திருப்புமுனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பாதையில் பயணிக்கும் போது பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாதாரண வாகனமொன்றிடமிருந்து தலா 400 ரூபா அறவிடப்படவுள்ளது. இவ்வீதியில் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள், பெளசர்கள் பயணிக்க அனுமதிக்கப் படமாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment