animated gif how to

நேட்டோ தாக்குதல் ஹில்லாரியிடம் கோபத்தை வெளிபடுத்திய ஹினா ரப்பானி

November 28, 2011 |

November 28, 2011.... AL-IHZAN World News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ சோதனைச் சாவடி மீது நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியதில் 24  பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் ஹினா ரப்பானி அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டனிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹினா ரப்பானி கடந்த ஞாயிறு அன்று ஹில்லாரியை சந்தித்து தங்களது பாதுக்காப்பு ஒருங்கிணைப்பு குழு எடுத்த முடிவையும் தெரிவித்துள்ளார். நேட்டோ படையின் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த பாதுக்காப்பு ஒருங்கிணைப்பு குழு அனைத்து அமெரிக்க துருப்புக்களை ஷம்சி ராணுவ தளத்திலிருந்து வெளியேறும்படி கூறியுள்ளது. மேலும் நேட்டோ படையினருக்கு பாகிஸ்தான் வழியாக செல்லும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் செல்வதையும் தடுக்க முடிவு செய்துள்ளது...

இது குறித்து ஹினா ரப்பானி கிளிண்டனிடம் தெரிவித்தாவது “இந்த மாதிரியான நடவடிக்கையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது மேலும் இது பாகிஸ்தான் இறையான்மைக்கு எதிரானதாகவும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார் மேலும் இது இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாத உள்ளது.’ என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலுக்காக ஹில்லாரி கிளிண்டன் வருத்தம் தெரிவித்துள்ளதோடு பாகிஸ்தானுடன் இணைந்து இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காண அமெரிக்காவை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!