November 30, 2011.... AL-IHZAN Local News
கிழக்கு மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான எம்.ஏ அப்துல் மஜீத்தின் ஜனாஸா நல்லடக்கம் அஸர் தொழுகையினை தொடர்ந்து சம்மாந்துறையில் இடம்பெற்றது.
மறைந்த அப்துல் மஜீத்தின் கனவு இல்லமான சம்மாந்துறை மலையடி கிராமத்திலுள்ள மஸ்ஜிதுல் முஅல்லா சுஹதாக்கள் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதேவேளை, இவரின் சொந்த ஊரான சம்மாந்துறையில் இன்று புதன்கிழமை துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அத்துடன் அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் ஆகியனவும் மூடப்பட்டன...
இவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் மஜீட், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியான நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சம்மாந்துறை அன்வார் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியாசலையில் காலமானார்
1960ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இவர் விளங்கினார்.
புடவை கைத்தொழில் அமைச்சர் மற்றும் அஞ்சல் துறை பிரதியமைச்சர் போன்ற பல பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.
இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.நௌஷாட்டின் மாமனாராவார்.

0 கருத்துரைகள் :
Post a Comment