November 23, 2011.... AL-IHZAN Local News
(எம்.எம்.ஜெஸ்மின், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரென்கினிற்கும் கல்முனை பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதில் பொது செயலாளர் நாயகமுமhன நிஸாம் காரியப்பருக்குமிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனையில் நடைபெற்றது.
இதன்போது, யுத்தம் மற்றும் சுனாமி ஆகிவற்றுக்கு பின்னரான சூழ்நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பொருளாதார, சமூக கலாசார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் உயர் ஸ்தானிகருக்கு விளக்கியதாக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்...
அத்துடன் பாதுகாப்பு, வியாபாரம், கல்வி, குடியிருப்பு மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் உயர் ஸ்தானிகருக்கு எடுத்து கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
சுனாமியினால் பாதிக்கப்பட்டு இறைவெளி கண்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள சிறார்கள் கல்வி கற்பதற்காக அமைக்கப்பட்டுள்ள றோயல் கல்லூரியின் கட்டுமான பணிகள் தொடர்பிலும் பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கு எடுத்துக் கூறியாதாக நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
சுமார் ஒரு மணித்தியாலயம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு செயலாளரான ஷாரா மென், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏம். பறக்கத், எம்.சாலிதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
படங்கள்: தமிழ்மிரர்

0 கருத்துரைகள் :
Post a Comment