animated gif how to

தீர்ப்பினை பொன்சேக்கா முன்னரே அறிந்திருந்தார் - உயர் நீதிமன்றத்தை நாட முயற்சி

November 18, 2011 |

November 18, 2011.... AL-IHZAN Local News
இணைப்பு-02

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு மூன்று  தீர்ப்பு தொடர்பில் நீதிமன்ற வளாகத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கருத்து வெளியிட்டார்.

இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் நாம் தீர்ப்பினை ஏற்றுக்கொள்கிறோம். நாம் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பினையும் ஏற்றுக்கொள்வோம். எனினும் இந்த தீர்ப்பு தொடர்பில் எமக்கு பாரிய விமர்சனம் ஒன்று உள்ளது. அதேபோன்று எத்தகைய தீர்ப்பு வழங்கப்படுமென பொன்சேக்கா ஏற்கனவே அறிந்திருந்தார். இன்று நாம் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் எமது பிள்ளைகள் பாடசாலை செல்வதற்குமான சூழலை முன்னாள் இராணுவத் தளபதியே ஏற்படுத்தினார்...


உலகில் எந்வொரு நாட்டிலும் இல்லாதவாறு தடுத்து வைப்பதற்கான அதிகாரம் உள்ள நிருவாகம் இலங்கையில் காணப்படுகிறது. உங்களுக்கு உரிமை உள்ளது. வீடுகளில் முடங்கிக்கிடக்காமல் முன்வருமாறு நாம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.


மேன்முறையீட்டு 
இதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்வதற்கு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி தெரிவித்தார். இதற்கமைய மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இணைப்பு-01
பொன்சேகாவுக்கு வெள்ளைக் கொடி வழக்கில் 3 வருட சிறை

சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை 5000 ரூபா அபராதம் விதித்தும் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை சுட்டுக் கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் உத்தரவிட்டார் என சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதன் பின்னணியில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வெள்ளைக் கொடி விவகார வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.


இந்த வழக்கில் சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை 5000 ரூபா அபராதம் விதித்தும் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அபராத தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகைக்கு சரத் பொன்சேகா வழங்கிய போட்டி தொடர்பாகவே சரத் பொன்சேகாவிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் சுல்பிகார் ரசீம் ஆகியோர் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளதுடன், சரத் பொன்சேகா மீதான மூன்று குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றமற்றவர் என நீதிபதி வராவெவ தீர்ப்பளித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றனர்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!