November 10, 2011.... AL-IHZAN Local News
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் கறுப்பு நாள் நேற்று (9.11.2011) புதன்கிழமையாகும். ட்டக்களப்பு கல்லியன் காடு முஸ்லிம் கொலணியில் பல ஆண்டு காலமாக இருந்து வந்த அல்லாஹ்வை ஸுஜுது செய்யும் பள்ளிவாயல் உடைக்கப்பட்டு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் கட்டப்பட்டு நேற்று (9.11.2011) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் கறுப்பு நாள் நேற்று (9.11.2011) புதன்கிழமையாகும். ட்டக்களப்பு கல்லியன் காடு முஸ்லிம் கொலணியில் பல ஆண்டு காலமாக இருந்து வந்த அல்லாஹ்வை ஸுஜுது செய்யும் பள்ளிவாயல் உடைக்கப்பட்டு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் கட்டப்பட்டு நேற்று (9.11.2011) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
புனித பள்ளிவாயலொன்று உடக்கப்பட்டு அதில் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நாளை கறுப்பு நாள் என பிரகடனப்படுத்துவதில் நமது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு கருத்து வேறுபாடு இருக்காது என நினைக்கின்றேன்.
1965ம் ஆண்டுகளில் மட்டக்களப்பு கல்லியன்காடு பிரதேசத்தில் அப்போதய அரசாங்கம் பல சமயத்தவர்களையும் குடியேற்றியது. இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களில் முஸ்லிம்களும் அடங்குவர்...
மட்டக்களப்பில் கல்லியன்காடு முஸ்லிம் கொலணி என்றால் யாருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
இங்கு 160 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்தன. கல்லியன் காடு முஸ்லிம் கொலனியில் பள்ளிவாயல், முஸ்லிம்களுக்கான பாடசாலை, முஸ்லிம் மையவாடி என முஸ்லிம்களின் பல் வேறு அடையாளச்சின்னங்கள் இருந்துள்ளன.
இந்தக்கிராமத்தில் மஸ்ஜிதுல் பிர்தௌஸ் எனும் பெயரில் பள்ளிவாயல் ஒன்றும் இருந்தது.
இந்த மஸ்ஜித் 1970ம் ஆண்டுக்காலப்பகுதியில் அமைக்கப்பட்டு இக்கிராம மக்கள் மற்றும் இங்கு செல்லும் முஸ்லிம்கள் தொழுது வந்தனர். இதனோடு சேர்த்தாற்போல் குர் ஆன் மரஸாவும் இருந்தது.
இக்கிராமத்திலிருந்த சாஹிறா முஸ்லிம் பாடசாலையில் 100 முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்றனர்.
இக்கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இங்கிருந்த ஏனைய அயலவர்களான தமிழ் மற்றும் கிறிஸ்த்தவ மக்களுடன் நட்புறவோடு இருந்து வந்தார்கள்.
இந் நிலையில் 1990ம் ஆண்டு ஏற்பட்ட இன விரிசலின் போது கல்லியன்காடு முஸ்லிம் கொலணியான இக்கிராமத்திலிருந்த முஸ்லிம்கள் அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்தார்கள்.
இங்கிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் காத்தான்குடி உட்பட பல இடங்களிலும் வசித்து வருகின்றார்கள்.
இக்கிராமத்திலிருந்த முஸ்லிம்களின் சொத்துக்கள் பாசிச விடுதலைப் புலிகளினால் இன விரிசலின் பெயரால் சூறையாடப்பட்டதுடன் கபலீகரம் செய்யப்பட்டன. இங்கிருந்த மஸ்ஜித் உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
தற்போது பாசிச விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கையினால் நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ள புதிய சூழ் நிலையில் இக்கிராமத்தில் ஏற்கனவே வசித்த சில குடும்பங்கள் மீள குடியேறியுள்ளன.
இதில் அங்கிருந்த மஸ்ஜிதுல் பிர்தௌஸ் எனும் பள்ளிவாயலை மீள புனரமைப்பதற்கு இங்கிராமதில் வசித்த மக்கள் மற்றும் காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பல தரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால், அம்முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திலுள்ள பள்ளிவாயல்களை பதிவு செய்யும் வக்பு சபையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பள்ளிவயாலே இப்பள்ளிவாயலாகும் (பதிவு இலக்கம் 1302 பிரி 152).
இந்த பள்ளிவாயலின் பெயரில் பேர்மிட் காணி பத்திரமிருந்தும் கூட இப்பிரதேசத்தில் இருக்கின்ற தமிழ் பெண் அரச நிருவாகியொருவர் இப்பள்ளிவாயலின் பேர்மிட்டை மாற்றி இந்துக்களின் பிரம்மகுமாரி இராஜயோக நிலையம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்தார்.
இம் மாவட்டத்திலுள்ள தமிழ் அரசியல் வாதிகளும் இந்த பெண் அரச நிருவாகிக்கு இந்த நிலையத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு பணித்தார்கள்
இந்த அனுமதியை ரத்துச்செய்து பள்ளிவாயல் இருந்த அந்தப் பூமியில் மீள அப்பள்ளிவாயலை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டும் அது முடியாமற் போனது.
இந்நிலையில் தான் அங்கு பள்ளிவாயலிருந்த அதே இடத்தில் பள்ளிவாயல் காணியில் முஸ்லிம்கள் புனித ஸுஜுது செய்த இடத்தில் இன்று பிரம்மக்குமாரிகளின் இராஜயோக நிலையம் அமைக்கப்பட்டு நேற்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நாள் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் கறுப்பு நாளாகும். இதை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் மறந்து விடக்கூடாது.
நமது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதியமைச்சர்கள் அதிகாரத்திலிருக்கின்றனர். அதே போன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் என பலரும் இருக்கத்தக்கதாக நமது புனித மஸ்ஜித் பறிபோயுள்ளது.
விஷேடமாக காத்தான்குடியிலுள்ள அரசியல் பிரமுகர்கள் இதில் கூடிய கவனம் செலுத்தி நமது புனித பள்ளிவாயலை மீட்டிருக்கலாம்.
ஆனால் ஆளுக்கால் அரசியல் வசையை பாடி நிற்பதிலேயே காலத்தை கழித்தார்களே தவிர இவ்வாறான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பார்க்கவில்லை.
ஒரு இனத்திற்கான நிரந்தர இருப்பு காணியிலேயே தங்கியுள்ளது ஆனால் அதை இன்று இழந்து நிற்கின்றோம்.
வீதியில் ஈத்தமரத்தை நாட்டி பூச்சாடியை வைத்து குண்டஞ்சட்டிக்குள் குதிரை ஓடுவதிலும், பாடசாலை உபகரணங்களை ஐய்யாயிரம் மாணவர்கள் என்றும் பத்தாயிரம் மாணவர்கள் என்றும் கொடுப்பதிலும், உரிமை பெற்றுத்தருவோம் என்று வீராப்பு பேசுவதிலும்தான் நமது அரசியல் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் அதன் பிரதிநிதிகளுமுள்ளனர்.
ஆனால் நமது இருப்புக்காக நாம் இழந்தவற்றை மீட்பதற்காக என்ன செய்வோம் என்பது பற்றி கிஞ்சித்தும் சிந்திப்பவர்களாக இல்லை.
நமது மாவட்ட பிரதேச அரசியல் வாதிகள் ஆளுக்கால் அரசியல் கையிறுழுப்புக்களை செய்வதை விட முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நமது பிரதேச காணி விவகாரங்கள் நாம் காணியில்லாமல் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டுமென அல்லாஹ்வின் பெயரால் கேட்டுக்கொள்கின்றோம்.
நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் குண்டாஞ்சட்டிக்குள் குதிரையோட்டும் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் வரைக்கும் நாம் கல்லியன்காடு முஸ்லிம் கொலனியிலுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாயலை இழந்தது போல இன்னும் நமது பூர்வீக இடங்களை இழக்க வேண்டி ஏற்பட நேரிடும்.
அல்லாஹ் பாதுகாப்பானாக...
News: kattankudi.info
0 கருத்துரைகள் :
Post a Comment