animated gif how to

துருக்கி:ஐந்து தினங்களுக்கு பிறகு காப்பாற்றப்பட்ட சிறுவன்

October 30, 2011 |

October 30, 2011.... AL-IHZAN World News

500க்கும் அதிகமானோர் மரணிக்க காரணமான கிழக்கு துருக்கியில் நடந்த பூகம்பத்தில் இடிந்த கட்டிட இடிபாடுகளிடையே ஐந்து தினங்களுக்கு பிறகு 13 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.


இச்சிறுவனின் பெயர் ஃபெர்ஹத். இவன் பணிபுரிந்த ஷூ கடையின் இடிபாடுகளில் கல் ஒன்றை நீக்கியபொழுது ஃபெர்ஹத் கண்டெடுக்கப்பட்டான். ஷூக்களிடையே ஃபெர்ஹத்தின் தலை சிக்கியதால் மரணம் நிகழவில்லை. இதனைத்தொடர்ந்து கற்களையும், ஷூக்களையும் நீக்கியபொழுது ஃபெர்ஹத்திற்கு உயிர் இருப்பது தெரியவந்தது.


பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஏழு மாடிக்கட்டிடத்தின் முதல் மாடியில் ஃபெர்ஹத் சிக்கியிருந்தான். ஃபெர்ஹத்தின் குடும்பம் இதே கட்டிடத்தில் வசித்துள்ளனர். கட்டிடத்தில் வசித்த 100 பேரை இதுவரை காணவில்லை...



ஃபெர்ஹத் உயிருடன் மீட்கப்பட்ட சூழலில் இதர நபர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. முன்னர் பல பகுதிகளிலும் மீட்பு பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!