October 21, 2011.... AL-IHZAN World News
OurUmmah: லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபி, உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். சர்வாதிகாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு ஏகாதிபத்தியம் வழிகாட்டிய போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் லியியாவின் சாதாரண மக்கள்தான்.
இஸ்லாமிய தாகத்துடன் இருக்கும் அந்த மக்கள் எப்படி வழிகாட்டப்படபோகின்றார்கள். லிபியா இன்னொரு ஈராக்காக , ஆப்கானிஸ்தானாக , ஏன் இன்னொரு பாகிஸ்தானாக மாறினாலும் மக்கள் விரும்பும் இஸ்லாமிய புரட்சி தூரமான கனவாகிவிடும். துனூசிய எழுச்சி, எகிப்திய எழுச்சி இரண்டிலிருந்தும் இது வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்....
கடாபியின் மக்களில் அரசியலில் துடிப்புடன் ஈடுபட்டு வந்த சைபுல் இஸ்லாம் என்ற மகன் தப்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவரை மேற்கு ஏகாதிபத்தியம் பாதுகாத்து தேவையான போது தமக்கு சாதகாமாக பயன்படுத்தப்போகின்றதோ ? தெரியவில்லை.
நன்றி:
OurUmmah.org
1 கருத்துரைகள் :
மேற்கின் தாலத்திற்கேற்ப பலரும் பல்வேறுபட்ட பெயர்களில் பல வேடங்களை ஏற்று பல காலமாக நடித்து வருகின்றனர்...மேற்குலகோ அனேகமாக எப்போதும் அவர்களின் போக்கிலேயேதான் இருக்கின்றனர்.நாம்தான் காலத்திற்கொருதலைவரை ஏற்பதும் கொல்வதுமாகவும் மேற்கின் அடிமையாகவும் அவர்களின் வழிகாட்டலின் கீழும் இருந்து கொண்டு போலியாக / கையாலாகாதவர்களாக மேற்கை ஏசி/விமர்சிக்கின்றோம்.தங்களை ஒழுங்காக நிர்வகித்துக் கொள்ளத்தெரியாத ஆஃப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,இராக்... துயினேசியா,எகிப்து இப்போ லிபியா நாளை சிரியா,யெமன்,இரான்.......என நீண்டு செல்வதை அனுபவிக்கும் சூடு சுரனை அற்ற வெட்கம் கெட்ட ஒரு சமூகம்...!!! முஸ்லிம்களை அல்லாஹ் காபிர்களின் அடிமைத்தனத்திலிருந்து பாதுகாப்பானாகவும்......
Post a Comment