animated gif how to

பேரினவாதத்தின் அடுத்த இலக்கு ஜெயிலானி தர்கா - பசீர் சேகுதாவூத்

September 21, 2011 |

September 21, 2011.... AL-IHZAN Local News 
பேரினவாதிகளின் அடுத்த இலக்கு ஜெயிலானியிலுள்ள தர்ஹாவும் அங்குள்ள பள்ளிவாயலும் என கூறப்படுவதாக உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச மத்திய குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.


பல நூற்றாண்டுகள் பலமை வாய்ந்த அநுராதபுரத்திலுள்ள சியாரம் மற்றும் பள்ளிவாசல் என்பன பேரின வாதிகளினால் உடைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இன்று முஸ்லிம்களுக்கெதிராக இலங்கையில் ஜாதிக ஹெல உறுமையினால் 18 இணையத் தளங்கள் நடாத்தப்படுகின்றன. இதில் பேரினாவாதிகளின் அடுத்த இலக்கு ஜெயிலானியிலுள்ள சியாரமும் அதனோடுள்ள பள்ளிவாயலுமாகுமென கூறப்படுகின்றது. இலங்கையில் பல கிராமங்களில் பல நூற்றாண்டுகள் பலமை வாய்ந்த பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்களை இலக்கு வைக்கும் வேலைகளில் பேரினவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்...


நாங்கள் கப்புறு வணக்கம் செய்யபவர்கள் அல்லர் ஆனாலும் முஸ்லிம்களின் அடையாள சின்னங்கள் பாதுகாப்பாக படவேண்டும் என்பதை வலியுறுத்து கின்றோம். இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்காமல் இருக்கவில்லை. அரசாங்கத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்தாலும் தனித்துவமாகவே இருக்கின்றோம். நாம் கல்முனை மற்றும் கொழும்பு போன்ற இடங்களில் தனித்துவமாக எமது கட்சியில் களம் இறங்கியுள்ளோம். என்றும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!