animated gif how to

அன்னா ஹஸாரே,அன்னா ஹஸாரே யார் இந்த அன்னா ?

September 07, 2011 |

September 07, 2011.... AL-IHZAN India News

அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே என்று இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் பலர் எழுதினார்கள் எழுதுகின்றார்கள் ஏன் எங்கள் முஸ்லிம் ஊடகங்களும் அன்னா ஹஸாரே என்பவர் மனித சமூகத்தின் விடிவுக்கான உதயாமாகியுள்ள சூரியன் என்று சொல்லாமல் சொன்னார்கள் ஆனால் அவர் RSS பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதியாக செயல்பட்டுள்ளார் என்ற உண்மைகள் தற்போது வெளியாயுள்ளது.
ஹஸாரேவுக்கு இந்தியாவின் பல பிரதான ஊடகங்கள் மிகவும் முக்கிய இடத்தை வழங்கி மக்களின் உள்ளங்களில் அவரை உயர்ந்த மனிதராக பதிவு செய்யும் திட்டமிட்ட வேலைகளை செய்துவருகின்றது தற்போது இந்தியவில் ஹஸாரேயின் உண்ணாவிரத  போராட்டம் சினிமாப் படமாக மராத்தியில் தயாராகவுள்ளது...
இப்படத்திற்கான கதை, திரைக்கதை வசனம் கடந்த ஆண்டே தயாராகிவிட்டதாக அதை எழுதிய கணேஷ் ஷின்டே கூறியுள்ளார். அது ஆங்கிலம் ஹிந்தி , தமிழ் உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்வும் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.
மராத்தியில் தயாராகும் இந்தப் படத்துக்கு ‘மாலா அன்னா ஹாய்காய்” -அன்னா ஹசாரேயாக வாழ விரும்புகிறேன்- என பெயரிடப்பட்டுள்ளது இவைகள் அன்னா ஹஸாரே என்பது இந்து பயங்கரவாதத்தை போதிக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை மீண்டும் கைப்பற்ற உருவாகபட்டுள்ள ஒரு கரைக்டர் என்ற பார்வையை சரி என்று உறுதிப்படுத்து கின்றது.
அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது என்று குற்றசாட்டப்படுகின்றத.
காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியை கொலைச் செய்த கொலைக்கார கும்பலான RSS- ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், யுவமோர்ச்சா, ஏ.பி.வி.பி போன்றவையாகும். இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹஸாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர். என்பது வெளிப்படையாகவே உள்ளது.
யூத் எகைன்ஸ்ட் கரப்ட்-Youth against corruption – இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட் India against corruption- ஆகிய ஹஸாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்க்பரிவார அமைப்புகளாகும் என்று  இந்திய முஸ்லிம் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால் ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹஸாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடுச்செய்கிறார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், ஏ.பி.வி.பியும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அதன் பங்கை வகித்துள்ளன . ஹஸாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிப்பெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் திருந்தார் . ஹஸாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப்போவதாக பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியும் கூறியிருந்தார் என்ற தகவல்கள் விடயத்தை விளங்கி கொள்ள வழிகாட்டுகின்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞரான செய்னுலாப்தீன் ஹஸாரே தொடர்பாக கூறியுள்ள வற்றையும் இங்கு பதிவு செய்கின்றோம்.
நன்றி: OurUmmah

2 கருத்துரைகள் :

கடையநல்லூர் நண்பன் said...

உண்மையையே உரைத்தீர், இவரைப் நேரில் சென்று ஆய்வு செய்தவர் இதுபோன்ற பல உண்மையை விஜய் டிவியில் விவாவத்தில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார். youtube-ல் காணலாம்.

dubai said...

iwanin muhathirai kilikka pattu vittazu, allahamdulillah'

Post a Comment

Flag Counter

Free counters!