animated gif how to

கத்தாஃபியை விரட்டுவது எண்ணெய்வளத்தை கைப்பற்ற – சாவேஸ்

August 26, 2011 |

August 26, 2011.... AL-IHZAN World News

கராக்கஸ்:வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் லிபியா அதிபர் கத்தாஃபிக்கு பகிரங்கமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
லிபியாவின் அதிபராக வெனிசுலா கத்தாஃபியை மட்டுமே அங்கீகரிப்பதாக கடந்த புதன்கிழமை சாவேஸ் தெரிவித்தார்.
லிபியாவின் எண்ணெய் வளத்தில் கண்வைத்து அமெரிக்கா தனது நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. கத்தாஃபியை பதவியிலிருந்து இறக்கும் நாடகத்தின் மூலம் லிபியாவின் ஆட்சியின் கயிற்றை பற்றிக்கொண்டு அங்குள்ள பெரும் எண்ணெய் வளத்தை கடத்திச் செல்வதுதான் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் முயற்சியின் நோக்கம் என சாவேஸ் குற்றம் சாட்டினார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!