animated gif how to

முஸ்லிம்களை ஒடுக்க இலக்கு வைக்கிறது அரசு

August 20, 2011 |

August 20, 2011.... AL-IHZAN Local News

சிங்கள இனவாதம் முதலில் முஸ்லிம்களுக்கும், இந்தியர்களுக்கும் குறிப்பாக மலையாளிகளுக்கும் எதிராகவே 1880 களில் எழுந்தது. நவீன வரலாற்றின் மிக ஆரம்பத்தில் அதாவது 1860 களில் கிறிஸ்தவர்கள் மீதான பௌத்தர்களின் எதிர்ப்பு கூர்மையடைந்தது. ஆனால் வெகுவிரைவில் சிங்கள கிறிஸ்தவர்களை அடக்குவதில் சிங்கள பௌத்தர்கள் வெற்றி கண்டனர்.

 அடுத்தடுத்த ஒடுக்குமுறைகள்
 1883ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பௌத்தர்கள் நடத்திய கலவரத்தில் 3 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். இதில் ஒரு பொலிஸாரும் கொல்லப்பட்டார். இதுவே இலங்கையில் முதல் முறையாக நிகழ்ந்த இன ஒடுக்குதல் வன்முறையாகும். இது 1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் பின்பு சிங்கள பௌத்தர்களின் கவனம் முஸ்லிம்களுக்கு எதிராகவும், இந்திய மலையாளிகளுக்கு எதிராகவும் திரும்பியது. 1915 முஸ்லிம்களுக்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் கம்பளையில் நிகழ்த்திய இன வன்முறை கம்பளைக் கலகம் என அழைக்கப்படுகிறது...
தமிழர் மீதான அடக்குமுறை
தமிழர்களுக்கு எதிரான  பல்பரிமாண ஒடுக்குமுறை வளர்ச்சி பெற்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் முடிவடைந்தது. ஈழத் தமிழரை ஒடுக்கும் வரை முஸ்லிம்களை சகிப்புடன் அணுகி அவர்களை ஒடுக்குவதற்கு தந்திரோபாய ரீதியில் காலம் வரும்வரை காத்திருந்தனர். இப்போது அதற்கான காலம் கனிந்திருப்பதாகத் தெற்குக் கருதுகின்றது.

புலிகளின் வீழ்ச்சியுடன் தமிழர்கள் இனி எழும்ப முடியாது எனக் கருதும் சிங்கள இனவாதிகள் தற்போது முஸ்லிம்களை பதம் பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஈழத் தமிழரை ஒடுக்கும்வரை முஸ்லிம்களை விட்டுவைக்க வேண்டிய தேவை சிங்கள ஆட்சியாளர்களுக்குக் காணப்பட்டது. அது ஒரு தந்திரோபாயமான  நிலையாகும். சிங்கள பௌத்தர்கள் இந்துக்களை விடவும், முஸ்லிம்களை  தமது தீவிர மத எதிரியாகவே கருதுகின்றனர்.
  
தாம் வழிபடும் இந்துத் தெய்வங்களையே சிங்களவர்கள் அவமதிக்கிறார்கள் என்றால் முஸ்லிம்கள் மீது அவர்கள் காட்டக்கூடிய இனக்குரோதத்தைச் சொல்லில் வர்ணிக்கத் தேவையில்லை.  எனவே, புலிகளை வீழ்த்திய பின்பு சிங்கங்கள் இப்போது முஸ்லிம்கள் மீது பாயத் தொடங்கியுள்ளன.  இதனையே அண்மைக் காலங்களாக அம்பாறையிலும் கிழக்கின் ஏனைய முஸ்லிம் கிராமங்களிலும் நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

முஸ்லிம் அடக்குமுறை
 தமிழரின் போராட்டம் வீழ்த்தப்பட்ட பின்னர் முஸ்லிம்களை அடக்குவது ஒரு சிறுவிடயமென கொழும்பு அரசு ஏற்கனவே கணக்குப் போட்டிருந்தது. அந்தக் கணக்கின்படி முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பமாகி விட்டன என்பதையே கிழக்கில் நடமாடும் மர்ம மனிதர்கள் பற்றிய விடயம் காட்டுகிறது. இலங்கையில் தமிழ் பேசும் சமூக கலாசாரத்தின் இருதயமாகக் காணப்படுவது பெண்கள் பற்றி அது கொண்டிருக்கும் நிலைப்பாடுதான். ஆதலால் கலாசாரம் என்று வந்தால் அதில் பெண்கள் மிகவும் உணர்வு பூர்வமான இடத்தை வகிக்கிறார்கள். அந்த வகையில் பெண்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது ஒரு கலாசார மையத்தை சிதைப்பதற்கு  ஒப்பானது.

இதனைத் தெரிந்து கொண்டே இளம் பெண்களைக் குறிவைக்கும் கிறீஸ் பூதம் கிளப்பி விடப்பட்டுள்ளது. மர்ம மனிதர்கள் என்று மக்கள் துரத்துபவர்களில் பலர் இராணுவ, கடற்படை, விமானப்படை முகாம்களுக்குள்ளும் பொலிஸ் நிலையங்களுக்குள்ளும் ஓடிப் போய் ஒளிந்து கொள்வதானது, இதன் பின்னணியில் திட்டமிட்டப்பட்ட சக்திகளின் கைகங்கரியம் இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

தமது பெண்கள் மீதான இத்தகைய வன்முறைகளால் ஆத்திரமடையும் முஸ்லிம் சமூகம் கிளர்ந்து எழும் என்பது அவர்களது எதிர்பார்க்கை. தமக்குத் தேவையானபோது, வசதியானபோது முஸ்லிம் மக்களைக் கிளர்ந்தெழ வைத்து, தமது படை பலத்தின் மூலம் அவர்களை அடக்கி அவர்களையும் தோல்வியுறச் செய்யவே அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் கிளர்ச்சிக்கோ, புரட்சிக்கோ முஸ்லிம் மக்கள் செல்லக் கூடாத மனநிலையை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது.முஸ்லிம்கள் பலமடைய முன்பே, புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம்களையும் பயமுறுத்தி அடக்க வேண்டுமென அரசு திட்டமிடுவதன் விளைவே இது. முஸ்லிம் தலைவர்களைத் தம்முடன் அணைத்து வைத்துக்கொண்டு முஸ்லிம்களை திராணியற்றவர்கள் ஆக்குவது இலகுவென அர_ நினைக்கிறது.

ஆனால் முஸ்லிம் மக்களிடம் காணப்படுகின்ற இறுக்கமான கூட்டுணர்வு அவர்களது பள்ளிவா\ல் தொழுகைகளுக்கு ஊடாக இலகுவாகச் செயற்படக்கூடியது. ஆதலால் முஸ்லிம் மக்களின் எழுச்சியை இலகுவில் அடக்க முடியாது.

தமிழரும் குரல் கொடுங்கள்
 முஸ்லிம் மக்களுக்காகத் தமிழ் மக்கள் பெரிதும் குரல் எழுப்ப வேண்டும். தமிழர், முஸ்லிம்கள் ஐக்கியம் இருவருக்கும் பலமானது. வன்னியில் முள்வேலி முகாம்களுக்குள் இருந்த தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்கள் உணவு சேகரித்து வழங்கிய நல் உதாரணத்தை இந்த இடத்தில் நினைவு கூருவது நல்லது. துன்பங்களில் ஒன்றிணையும் போது உருவாகும் ஐக்கியம் ஆழவேரூன்றும். இஸ்லாமியப் பெண்களுக்கும், இஸ்லாமிய சமூகத்துக்கும் எதிராகச் சிங்கள இராணுவம் செயற்படுவதைத் தமிழ்ச் சமூகம் பார்த்துக் கொண்டு பொறுமை காக்கக் கூடாது. ஆனவரை தமிழ்ச் சமூகத்தில் உள்ள பலதரப்பினரும் தம் எதிர்க் குரலை எழுப்ப வேண்டும்.

நன்றி: உதயன்  

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!