animated gif how to

முஸ்லிம் கல்வி மாநாடு கல்வி அமைச்‌சின் செயலாளர் சந்திப்பு தோல்வி

July 26, 2011 |

July 26, 2011.... AL-IHZAN Local News

கல்விமைச்சு அதிகாரிகளுக்கும், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டு பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடனும், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் கல்வியற் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடனே இச்சந்திப்பு நடைபெறுவதுண்டு. இந்நிலையில் இன்று நடைபெற்றுள்ள இரு தரப்புக்குமிடையிலான சந்திப்பில் முஸ்லிம் கல்வி மாநாட்டு பிரதிநிதி ஒருவர் தமது மனைவியை கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட வேண்டுமென இதன்போது அடம்பிடித்துள்ளார்...

இதனை ஏற்க மறுத்துள்ள கல்வியமைச்சின் செயலாளர்  எச்.எம். குணசேகர இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், முஸ்லிம் மாநாட்டு கல்விப் பிரதிநிதிகள் நடந்துகொண்ட முறையையடுத்து எதிர்காலத்தில் தாம் அவர்களுடன் எத்தகைய பேச்சுக்களிலும் கலந்துகொள்ளப் போவதில்லையெனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் நலன்களை முன்நிலைப்படுத்தாது தமது சொந்த நலன்களை முதன்மைப்படுத்தும் இதுபோன்ற செயற்பாடுகள் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கே பாதக விளைவுகளை ஏற்படுத்துமென்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.


கல்வியமைச்சுக்கும், முஸ்லிம் கல்வி மாநாட்டு பிரதிநிதிகளுக்குமிடையே 3 மாதங்களுக்கு ஒருமுறை கடந்தகாலங்களில் நடைபெற்றுவந்த சந்திப்புகளின் மூலம் முஸ்லிம் சமூகம் சில பயன்களை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இன்றைய சந்திப்பில் தனிநலனை முதன்மைபடுத்த முயன்று இறுதியில் அதுவே பாதகத்திற்கு இட்டுசசென்றுள்ளது. தமது பிரதிநிதியின் இந்த சுயநல செயற்பாடு குறித்து அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு கவனம் செலுத்துவது சிறந்ததென இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.




0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!