July 14, 2011.... AL-IHZAN India News
மும்பையில் நேற்று மாலை 3 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்? என்பதுக் குறித்து இதுவரை தெளிவாக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வழக்கம்போல் சில ஊடகங்கள் போலீஸ் தரப்பு கூறியதாக லஷ்கர் மற்றும் இந்திய முஜாஹிதீன் அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என ஊகங்களை வெளியிட்டுள்ளன. இதைப்போல இன்னும் பல ஊகங்களும் பரவி வருகின்றன.
2008 ஆம் ஆண்டு குஜராத் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறி இரண்டு இந்திய முஜாஹிதீன் எனக்கூறப்படும் அமைப்பைச் சார்ந்த இரண்டு பேர் கைதுச் செய்யப்பட்டதுதான் குண்டுவெடிப்பிற்கு காரணமாக கூறப்படும் ஊகமாகும். முஹம்மது முபீன் ஷாக்குர்கான் என்ற இர்ஃபான், அய்யூப் அமீன் ஷேக் ஆகியோர் கடந்த செவ்வாய்கிழமை ஏ.டி.எஸ்ஸால் கைதுச்செய்யப்பட்டனர்.
கைதுச் செய்யப்படுவதற்கு முன்பு துப்பாக்கிகள், வெடிக்குண்டுகளுடன் இவர்களை ஏ.டி.எஸ் பிடித்ததாம். இவர்கள் கைதுச் செய்யப்பட்ட மறுதினம் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததது என்பதுதான் ஊகமான செய்தி. பொதுவாக குண்டுவெடிப்பு நிகழ்ந்தபிறகுதான் கைதுச்செய்வார்கள். இச்சம்பவத்தில் குண்டுவெடிப்பு நிகழும் முன்பே இருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், சில வட்டாரங்கள் சுட்டிக்காட்டுவது வேறு சம்பவமாகும்.மிட் டே பத்திரிகையின் புலனாய்வு செய்தியாளர் ஜே டே கொலையின் பின்னணியில் சோட்டா ராஜன் செயல்பட்டதை மும்பை க்ரைம் போலீஸ் கண்டறிந்தது. விநோத் அஸ்ராணி, சதீஷ் காலியா உள்பட எட்டுபேரை போலீஸ் கைது செய்திருந்தது. ஆனால் ஏன் சோட்டாராஜன் ஜே டேவை கொலைச் செய்தார் என்பதை போலீஸாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
போலீஸ் விசாரணையில் மும்பையின் பத்திரிகையாளர்களுக்கு நம்பிக்கையில்லை. இரண்டு பத்திரிகையாளர்கள், மும்பை ப்ரஸ் கிளப், மராத்தி மொழி பத்திரிகையாளர்கள் அளித்த பொது நல மனுவில் மும்பை உயர்நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளது. ஜே டே கொலையின் பின்னணியில் மும்பை போலீஸ் மீதே சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறெனில் போலீஸ் விசாரணையில் நீதி கிடைக்காது என பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சி.பி.ஐ விசாரணையை அவர்கள் கோருகின்றனர்.
ஆனால் மஹராஷ்ரா அரசோ வழக்கு முடிந்துவிட்டதாகவும், சி.பி.ஐ விசாரணை தேவையில்லை எனவும் கூறுகிறது.ஜே டே கொலையின் விசாரணை சி.பி.ஐ வசம் செல்லாமல் இருக்க மஹாராஷ்ட்ரா மாநில அரசும், போலீஸும் காட்டும் அவசரம் சந்தேகங்களை பலப்படுத்துகிறது. ஜே டே கொலைவழக்கில் முதலில் சோட்டா ஷக்கீலுடன் தொடர்புடையவர்கள் எனக்கூறி நான்கு பேரை போலீஸ் கைதுச்செய்து பின்னர் விடுதலை செய்தது. இது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
சோட்டா ராஜன் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சதீஷ் காலியா உள்ளிட்டோரை போலீஸ் கைதுச்செய்தது என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இக்பால் கஸ்கர் கொலை முயற்சி, ஜே டே கொலை ஆகிய வழக்குகளுடன் தொடர்புடைய சோட்டா ராஜன் கும்பலின் முக்கிய நபர்கள் எல்லோரும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இக்பால் கஸ்கர் கொலை முயற்சி வழக்கில் சோட்டா ராஜனின் வலது கரமான டி.கே.ராவு, உமைதுர்ரஹ்மான் ஆகியோர் முக்கிய நபர்களாவர். இன்னொரு முக்கிய நபரான விக்கி மல்கோத்ராவும் உடனடியாக சரணடைவார் என சந்தேகிக்கப்படுகிறது.
சோட்டா ராஜன் கும்பலைச் சார்ந்த சக்தி மிகுந்த நபர்கள் இருவரை திடீரென போலீஸ் கைதுச் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சோட்டா ராஜனுக்கும், உளவுத்துறைக்கும் இடையேயான தவறான உறவு சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News: thoothu
1 கருத்துரைகள் :
இந்திய பாதாள மாபியா இயக்கங்களின் இன்றைய கோட்பாதர் இந்திய உளவுத்துறையான “றோ“ ஆகும்.
அமெரிக்க இந்திய ஏகாதிபத்திய சக்திகளின் அரசியல் மற்றும் பொருளாதார கூட்டுறவின் பின்னைய விளைவுகளே இராணுவ உளவு செயற்பாடுகளை ஒன்றினைத்தலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளலுமாகும்.
சீ.ஐ.ஏ., மொஸாட் போன்ற அமைப்புக்கள் சர்வதேச மாபியா கட்டமைப்புக்ளின் ஊடாகவே பல பயங்கரவாதங்களை நிகழ்த்தியுள்ளன. இதில் பாகிஸ்தானிய ஐ.ஏஸ்.ஐ.யும் விதிவிலக்கல்ல.
இதன் இன்னொரு பரிணாமம் இந்திய றோ அமைப்பினது முஸ்லிம்களிற்கும் பாகிஸ்தானிற்கும் எதிராக குண்டு வெடிப்புக்களை மேற்கொள்ளல். மும்பாய் ஹோட்டல் தாக்குதல் உட்பட பல நிகழ்வுகள் “றோ“வினது அனுசரணையின் கீழேயே இடம்பெற்றுள்ளது.
மேலதிக விபரங்களிற்கு....
http://khaibarthalam.blogspot.com/2011/07/blog-post_9250.html
Post a Comment