- அபூ றப்தான் -
இன்று காலை ஜாமியதுஸ் சித்தீகியா மகளிர் அரபுக் கல்லூரி மாணவியர் வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஆகியவற்றுக்குட்பட்ட நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் மேலதிக விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இன்று காலை ஜாமியதுஸ் சித்தீகியா மகளிர் அரபுக் கல்லூரி மாணவியர் வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஆகியவற்றுக்குட்பட்ட நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் மேலதிக விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நேற்றிரவு திருமண வீடு ஒன்றிலிருந்து சித்தீகியா மாணவர் விடுதியிலுள்ள மாணவியருக்கு இரவு உணவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் காத்தான்குடி மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த சுமார் தொண்ணூறு மாணவியர் இவ்வுணவை உட்கொண்டுள்ளனர்.
காலை மில்லத் மகளிர் வித்தியாலயத்துக்கு சென்றுள்ள இம்மாணவியருள் 35 பேர் வயிற்றுளைவு மற்றும் வந்தி போன்ற தாக்கங்களுக்கு உள்ளாகிய நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் நசீர்தீன் மற்றும் வைத்திய உத்தியோகத்தர் டாக்டர் அம்ஜத் ஹசன் உட்பட வைதியர்களடங்கிய குழு இவர்களை உடனடியாகப் பரிசோதித்து சிகிச்சைகளை ஆரம்பித்தனர். தற்போது மாணவியரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்கம் உணவு நஞ்சாதல் அல்லது பழுதடைந்த உணவை உட்கொண்டமை காரணமாக ஏற்பட்டதா என்பதற்கான விசாரணையை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் முஹைதீன் அவர்கள் தலைமையில் பொதுச் சுகாதார அதிகாரிகளான பசீர் மற்றும் றஹ்மதுல்லாஹ் ஆகியோரைக் கொண்ட குழு ஆரம்பித்துள்ளது.
வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நோயுற்ற மாணவியரைப் பார்வையிட்டதோடு, நிலைமை குறித்து வைத்தியர்களுடன் கலந்துரையாடினார். தேவையான வைத்திய சிகிச்சைகளை விரைவு படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
News: Kattankudi.info
0 கருத்துரைகள் :
Post a Comment