animated gif how to

உலக மக்கள்தொகை 7 பில்லியனை தாண்டுகிறது

July 22, 2011 |

July 22, 2011.... AL-IHZAN World News

ஐ.நா:உலக மக்கள் தொகை இவ்வாண்டு அக்டோபர் மாதம் இறுதியில் 7 பில்லியனை தாண்டும் என ஐ.நா ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு விநாடியும் உலகில் 5 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 7 கோடியே 80 லட்சம் மக்கள் உலகில் அதிகரித்து வருகிறது.
1960 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 3 பில்லியனாக இருந்தது. 1999-ஆம் ஆண்டு ஆறு பில்லியன் ஆனது. ஐ.நாவின் புள்ளிவிபரப்படி வருகிற 2025 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை எட்டும் என கூறப்படுகிறது.
ஏழை நாடுகளில் மக்கள்தொகை பெருக்கம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. 10 வயதிற்கும் 24 வயதிற்கும் இடையே உள்ள நபர்களின் எண்ணிக்கை 1.8 பில்லியனாகும். தம்பதிகள் இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொண்டால் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என ஐ.நா ஆய்வறிக்கை கூறுகிறது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!