animated gif how to

ரிஸானாவுக்காக (Blood Money) வழங்க தயார் - அமைச்சர் டிலான் அறிவிப்பு

June 15, 2011 |

June 15, 2011.... AL-IHZAN Local News
சவுதியில் மரணதண்டனைக்கு உள்ளாகியுள்ள ரிஸானாவுக்கு, மரணமான குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கும் பட்சத்தில் அவர்கள் நிர்ணயிக்கும் ‘மரணத்தை விளைவித்ததற்கான நஷ்ட ஈட்டுத் தொகை’ (Blood Money)  வழங்க இலங்கை ஆயத்தமாகவிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

சவுதியில் அமுலிலுள்ள ஷரீஆ சட்டத்தின் பிரகாரம் மரணதண்டனை பெற்ற ஒருவருக்கு சவுதி மன்னராலும் மன்னிப்பு வழங்கமுடியாது. மரணமானவரின் பெற்றோர் விரும்பினால் மட்டுமே மன்னிப்பு வழங்க முடியும்.

அவ்வாறு மன்னிப்பு வழங்கினாலும் அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் நிர்ணயிக்கப்படும் Blood Money  வழங்கப்படவேண்டும். அதனை அவர்களே தீர்மானிப்பார்கள்....

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ரிஸானா நபீக்கின் விடயத்திலும் குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கும்வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். மன்னிப்பை வழங்குவார்கள் என நாம் இன்னமும் எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து மரணதண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குழந்தையின் பெற்றோர் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கும்வரையில் அவர்களது மனம் இளகும்வரையிலும் நாம் காத்திருக்கவேண்டும். ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்துவதால் எதுவித பலனும் ஏற்படப்போவதில்லை.

எமது முழுநோக்கமும் ரிஸானாவை விடுதலை செய்து இலங்கைக்கு அழைத்து வருவதே என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கிக் கட்டடத்தில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சருடன் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க, அமைச்சின் செயலாளர் கேணல் நிஸ்ஸங்க விஜேரட்ண ஆகியோரும் கலந்துகொண்ட னர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!