June 08, 2011.... AL-IHZAN India News
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று புதன்கிழமை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது,
இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.
இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்..........
மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.
இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.
0 கருத்துரைகள் :
Post a Comment