சவூதி அரேபியாவில் குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கின் விடுதலை குறித்து சவூதி அரேபிய நீதியமைச்சின் ஆலோசகருடன் இலங்கை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரைடியாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது கொழும்பில் நடைபெறும் ஆசிய – ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தின் கூட்டத்தின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையிலும் ரிஸானாவின்
வறிய பின்னணியையும் கருத்திற்கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரியதாக தெரியவருகிறது.
0 கருத்துரைகள் :
Post a Comment