அரசாங்கத்துக்கும் தமிழ்க் கூட்டமைப் புக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களும் இன்னுமொரு தரப்பாகப் பங்கேற்க வேண்டுமென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாக அக்கட்சியின் தவிசாளர் பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்கள் பேச்சுவார்த்தையில் தனித் தரப்பாகப் பங்குபற்றுவது தொடர்பாக ஜனாதிபதியுடன் முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் பஸீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்க் கூட்டமைப்புடனும் இது தொடர்பாகப் பேசி வருகின்றது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்க வேண்டுமானால் மு.காவும் மூன்றாந்தரப்பாகப் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்க் கூட்டமைப்பிடம் எடுத்துரைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-yarlmusllim-
RSS Feed
June 26, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment