June 04, 2011.... AL-IHZAN Local News
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது என்று உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார் அதேவேளை பல்கலைக்கழக மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சியை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த 6 மனுக்களும் தலைமைத்துவ பயிற்சிக்கு உத்தரவிடுவதற்கு உயர் கல்வி அமைச்சருக்கு அதிகாரம் இருப்பதா கண்ட உயர் நீதிமன்றம் மனுக்களை நிராகரித்துள்ளது......
அதேவேளை சில தினங்களுக்கு முன்னர் தென்கிழக்கு பல்கலை கழக நிகழ்வொன்றில் உரையாற்றிய உயர் கல்வி அமைச்சர் தலைமைத்துவ பயிற்சிக்குரிய காலம் மூன்று மாதங்களாக அதிகரிக்க இருப்தாக தெரிவித்துள்ளார் இரண்டாம் கட்ட தலைமைத்துவப் பயிற்சியில் விரிவாக பத்தாயிரத்து 224 பேர் பங்கேற்கவுள்ளதாகவும் 28 நிலையங்களில் இந்தப் பயிற்சிகள் நடைபெறவுள்ளதாகவும் மாணவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி பயிற்சி நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment