animated gif how to

இலங்கை பிரிமியர் லீக்(LPL)வடக்கு அணிக்கு விட்டோரி தலைவர், கிழக்கிற்கு சஹீட் அப்ரிடி

May 02, 2011 |

May 02, 2011.... AL-IHZAN Sports News
எதிர்வரும் ஜூலை மாதம், இலங்கையில் பிராந்திய அணிகளுக்கிடையிலான 20- இருபது ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வடக்கு அணிக்கு நியூஸிலாந்தின் அணியின் தலைவர் டேனியல் விட்டோரியும் கிழக்கு அணிக்கு பாகிஸ்தான் அணியின் தலைவர் சஹீட் அப்ரிடியும் தலைமை தாங்கவுள்ளனர்.

இலங்கை இருபது-20 பிரிமியர் லீக் (SL-T20-PL) எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சுற்றுப்போட்டி சமர்செட் எண்டர்டெய்ன்மன்ட் வென்சர்ஸ் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. 7 அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளன.

ஜூலை 15 ஆம் திகதி ஆரம்பமாகும் இச்சுற்றுப்போட்டி 18 நாட்களுக்கு நீடிக்கும். மொத்தமாக 24 போட்டிகள் நடைபெறும். இறுதிப்போட்டி ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெறும்.

இப்போட்டிகளில் மேற்கு அணிக்கு திலகரட்ன தில்ஷான் தலைமை தாங்கவுள்ளார். கந்துரட்ட (மலையக) அணிக்கு குமார் சங்கக்காரவும் றுகுணு (தெற்கு) அணிக்கு சனத் ஜயசூரியவும்........

தலைமை தாங்குவர். வயம்ப (வடமேற்கு) அணிக்கு மஹேல ஜயவர்தனவும் ஊவா அணிக்கு சமிந்த வாஸம் தலைமை தாங்குவர். 
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய அணிகளுக்கு வெளிநாட்டு வீரர்கள் அணித்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வடக்கு அணிக்கு நியூஸிலாந்து அணித்தலைவர் டேனியல் விட்டோரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்குப் பிராந்திய அணிக்கு பாகிஸ்தான் அணித்தலைவர் சஹீட் அவ்ரிடி தலைமை தாங்கவுள்ளார்.

ஒவ்வொரு பிராந்திய அணியிலும் 5 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்யப்படலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியின் போதும் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மாத்திரமே விளையாட முடியும். இப்போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இலங்கை கிரிக்கெட் சபையும் தேசிய கிரிக்கெட் தேர்வாளர்களும் இணங்கியுள்ளனர். சுமார் 70 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இப்போட்டிகளில் விளையாட பதிவு செய்யப்படவுள்ளனர்.

இப்போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஏறத்தாழ அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

அத்துடன் மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெயில், ட்வைன் பிராவோ, டெரன் பிராவோ, இந்திய அணியின் இர்பான் பதான், யூசுப் பதான், தென்னாபிரிக்காவின் ஹேர்சல் கிப்ஸ், டேவிட் வார்னர். ஷோன் டெய்ட் ஆகியோர் இப்போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் இப்போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

2011 கிண்ணத் தொடரில் சுற்றுப்போட்டி முகாமையாளராக பணியாற்றிய மிலிந்த் ரெஜி இலங்கை பிரிமியர் லீக் தொடரில் கிரிக்கெட் தொடர்பான சகல விடயங்களுக்கும் பொறுப்பாளராக இருப்பார். இவர் இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் மும்பை அணித்தலைவராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


News: வீரகேசரி இணையம் 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!