animated gif how to

பல்கலைக்கழக மாணவரும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனமும்

May 22, 2011 |

May 22, 2011.... AL-IHZAN Local News

இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக பயிற்சிகள் மிட்டமிட்டவகையில் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இந்தப் பயிற்சியிலிருந்தும் முஸ்லிம் மாணவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு பெற்றுக்கொடுக்குமாறும் விடுக்கப்பட்ட அத்தனை கோரிக்கைளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய சட்டங்களையும், மற்றும் மாணவர்களுக்கு ஜும்ஆ செல்வதறகான வாய்ப்புகளும் வழங்கப்பட மாடட்டாதென தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்பயிற்சிநெறி குறித்து முஸ்லிம் பெற்றோர்கள் பெரும் கவலை கொண்டிருப்பதாக அறிய வருகிறது.

பயிற்சிநெறிக்கு செல்லாதுவிட்டால் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியை தாம் பெறத்தவறி விடுவோம் என்ற அச்சமும் எமது முஸ்லிம் மாணவர்களிடம் மேலோங்கியுள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே இப்பயிற்சிநெறி குறித்து கவலை கொண்டுள்ள நிலை இதுவரை இவ்விவகாரம் குறித்து எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதியும் ஆர்வம் செலுத்தாமலிருப்பது பெரும் கவலையை சமூக மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. எம் முஸ்லிம் அரசியல் வாதிகளை நினைத்து நாம் மீண்டுமொருமுறை நொந்து கொள்வதைத்தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லையென்றே தோன்றுகிறது.


பல்கலைக்கழக நுழைவு அனுமதி பெற்ற மாணவர்களுக்கான கட்டாய தலைமைத்துவப் பயிற்சி முகாம்களை ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்போவதாக இலங்கை உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  அவற்றை பின்போடுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் கேட்டிருந்தபோதிலும், அந்த பயிற்சிகளை தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நடத்தப் போவதாக இலங்கை கல்வியமைச்சின் செயலாளர் சுனில் நவரட்ண....
தெரிவித்துள்ளார். 

இராணுவ முகாம்களில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருக்கும் இந்த பயிற்சிகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த முதல்கட்ட பயிற்சி முகாம்களை பின்போடுவது குறித்து பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது.  ஆனால், அப்படி பின்போடுவதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று நவரட்ண தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே 90 மில்லியன் ரூபாய்களை செலவிட்டு விட்டதால் நாம் இதனை நிறுத்த முடியாது. இதனை நிறுத்தினால் அதனால் பொது நிதிக்கு பெரும் இழப்பு ஏற்படும். அத்துடன் இதற்காக பல பயிற்சி நிலையங்களை நாங்கள் எடுத்திருக்கிறோம், அவற்றை ரத்துச் செய்தால் அதனாலும் பெரும் இழப்பு ஏற்படும் என்று நவரட்ண தெரிவித்துள்ளார். 

மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகளை இராணுவ முகாம்களின் நடத்தும் இந்தத் திட்டத்துக்கு மாணவர் அமைப்புக்கள் மற்றும் பல தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அதனை நிறுத்துமாறு கோரி மாணவர் அமைப்பு ஒன்று இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது. 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!