animated gif how to

எகிப்திய ஸலபிகளை பயங்கரவாத பொரியில் சிக்கவைக்க சதியா ?

May 10, 2011 |

M.ஷாமில் முஹம்மட்

எகிப்து பல சதாப்த ஹுஸ்னி முபாரக்கின் மேற்கு சார்பு சர்வாதிகாரத்தை மக்கள் எழுச்சி முறியடித பின்னர் எகிப்திய மக்கள்விரும்பும் ஆட்சியை நோக்கி எகிப்து நகர்ந்து கொண்டிருகின்றது எகிப்திய மக்கள் மேற்கின் அஜண்டாவுக்கு வேலைசெய்யும் அரசாங்கத்தை சிறைக்கு அனுப்பியுள்ளனர் அவர்கள் அனைத்து மனிதர்களுக்கும் முழுமையான சுதந்திரத்தை வழங்கும் இஸ்லாமிய பெறுமானங்களை கொண்ட அரசாங்கம் ஒன்றை தெரிவு செய்யவதில் ஆவலாக உள்ளனர்.
ஹுஸ்னி முபாரக் சர்வாதிகார ஆட்சியில் இருந்த தற்போதும் இருந்துவரும் அரசியல் யாப்பின் 2 ஆவது சரத்து எகிப்து இஸ்லாமிய பெறுமானங்களை கொண்டதாக விளங்கும் என்று குறிபிட்டுள்ளது எனினும் முபாரக் அரசு அதை புறக்கணித்து நடந்து வந்துள்ளது தற்போது அரசியல் யாப்பு மாற்றங்களுடன் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பாதையில் எகிப்திய மக்கள் நகர்ந்து கொண்டுள்ளனர் விரிவாக இந்த சந்தர்பத்தில்.......
அங்குள்ள சிறுபான்மை கொப்டிக் கிருஸ்தவ தலைவர்கள் எகிப்து அரசியல் யாப்பின் 2 ஆவது சரத்து நீக்கப்படவேண்டும், எகிப்து இஸ்லாமிய சார்பற்ற நாடாக உருவாக்கப்படவேண்டும் என்று பகிரங்கமாக கோரிவருகின்றனர்.

எகிப்து மொத்த மக்கள் தொகை 8 கோடி ஆகும் அவர்களில் 10 சதவீதம் பேர் கொப்டிக் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். கொப்டிக் கிறிஸ்தவர்களின் பிரதான தலைவர்கள் எகிப்து இஸ்லாமிய பெறுமானங்களை கொண்ட நாடாக உருவாகுவதை கடுமையாகவும் பகிரங்கமாகவும் எதிர்த்து வருகின்றனர் இவர்கள் யாப்பு மதசார்பற்ற அரசியல் மாதிரியை கொண்டதாக அமையவேண்டும் என்று தெரிவித்து பல அரசியல் விவாதங்களில் கலந்து வருகின்றனர் இது தொடர்பாக எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் தனது நிலைப்பாட்டை அவர்களுக்கு தெளிவு படுத்தியுள்ளது.
சிறுபான்மை கிருஸ்தவர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொண்டதாகவும் குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளராக கூட கிருஸ்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் அரசியல் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் விதமாகவும் அதேவேளை எகிப்தின் பெரும்பான்மை மக்கள் விரும்பும் இஸ்லாமிய பெறுமானங்களை கொண்டதாக எகிப்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது முபாரக் ஆட்சி காலத்தில் எந்த சிறுபான்மையினரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது குறிபிடத்தக்கது அந்த சட்டங்கள் தற்போது மாற்றம் பெற்றுவருகின்றது.

அலெக்ஸாண்டிரியா கொப்டிக் கிறிஸ்தவ மத தலைவர்
ஆனாலும் அந்த நிலைப்பாட்டை கொப்டிக் கிருஸ்தவ தலைவர்கள் ஏற்பதாக இல்லை, எகிப்தில் பகிரங்க அரசியல் விவாதம் ஒன்றில் பேசிய இஹ்வானுல் முஸ்லிமீன் முக்கிய உறுப்பினர் ஒருவர் சிறுபான்மை கொப்டிக் கிருஸ்தவர்கள் முழுமையான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் , நீதியையும் ,சமமான சந்தர்பங்களையும் அனுபவிக்கும் உரிமை யாப்பின் ஊடாக உறுதிப்படுத்தபடும் ஆனால் எகிப்து இஸ்லாமிய பெறுமானங்களை கொண்டதாக விளங்கவேண்டும் என்றும் யாப்பின் 2 ஆவது சரத்து நீக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார் மேலும் அந்த விவாதத்தில் பேசிய அந்த உறுப்பினர் பிரான்சில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டது அதை பிரான்ஸ் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனாலும் பிரான்ஸ் சட்டவாக்கசபை அதை சட்டமாக அங்கீகரித்துள்ளது என்பதையும் நினைவுபடுத்தி வாதங்களை முன்வைத்துள்ளார் .
இந்த பின்னணியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு  இஸ்லாத்தை தழுவிய பெண் ஒருவர் அவரின் மூன்று கிறிஸ்தவ சகோதரர்களினால் கொலை செயப்பட்டார் என்ற செய்தி பரவியது ஆனால் பிரதான மீ டியாக்களில் அவை இடம்பெறவில்லை கொல்லப்பட்ட அந்த பெண் 2005 அம் ஆண்டு அதாவது ஆறு வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை தழுவியவர் என்பது குறிபிடக்தக்கது இஸ்லாத்தை தழுவியிருந்த அந்த பெண் , பெண்ணின் கணவர் , அவர்களின் ஐந்து வயது மகன் ஆகியோர் கத்தியால் குத்தி கொலைசெய்யபட்டனர் என்று செய்திகள் வெளியாகின
அந்த சம்பவம் முஸ்லிம் கிறிஸ்தவ முறுகல் நிலையை ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் கடந்த வாரம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட யுவதி ஒருவர் கொப்டிக் தேவாலயம் ஒன்றில் தடுத்து வைக்கபட்டுள்ளதாக செய்தி பரவியதால் கொப்டிக் தேவாலயம் முன்னர் முஸ்லிம்கள் திரண்டு அந்த யுவதியை விடுவிக்குமாறு கோரியுள்ளனர் இதன்போது கொப்டிக் தேவாலயத்தில் அருகில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களில்  கொப்டிக் தேவாலயம் தீமூட்டபட்டதுடன் 12 பேர் கொல்லப்பட்டும் 220 பேர் காயமடைந்தும் உள்ளனர் இந்த கலவரம் முஸ்லிம் , கிறிஸ்தவ தலைமைகள்  உட்பட்ட அனைவரினால் கடுமையாக கண்டிக்கப்பட்டது
கலவரத்துக்கு காரணமானவர்களாக எகிப்திய ஸலபிகள் குற்றம் சாட்டப்பட்டனர் அந்த செய்தி எல்லா சர்வதேச மீடியாக்களிலும் இடம்பெற்றது.  கடந்த  ஜனவரி மாதமும் எகிப்தில் முபாரக் நிர்வாகத்தின் போது கலவரம் வெடித்தது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இரு யுவதிகளை அலெக்ஸாண்டிரியா நகரின் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று  தடுத்து வைத்து    சித்திரவதை செய்வதாக செய்திகள் வெளியாகின அதை தொடர்ந்து   அந்த தேவாலயத்திற்கு அருகாமையில் கார் குண்டு வெடித்தது அதில் 21 பேர் கொல்லபட்டனர் அன்று ஆட்சியில் இருந்த ஹுஸ்னி முபாரக் அரசு  ஸலபி அமைப்பை சேர்ந்த பலரை கைது செய்து குற்றத்தை அவர்கள் மீது சுமத்தியது கைது செய்யப்பட்ட  ஸலபி அமைப்பை சேர்ந்த ஒருவர் முபாரக் அரசினால் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் இந்த சம்பவம் எகிப்தில் ஸலபி அமைப்பும் நாடு பூராவும் பெரிய அளவில் முபாரக் அரசுக்கு எதிராக ஆர்பாட்டங்களில்   களம் இரங்க காரணமாக அமைந்தது.
பின்னர்   ஸலபிகள் மீதான குற்றசாட்டுகள் போலியாக முபாரக் அரச உள்துறை அமைச்சரினால் தயாரிக்கப்பட்டவை என்ற உண்மை வெளிவந்ததுடன்  அந்த கார் குண்டு தாக்குதலை முபாரக் அரசுதான் திட்டமிட்டு செய்துள்ளது என்ற உண்மைகள் தற்போதும் வெளியாகிகொண்டுள்ளது.
அதேபோன்று தற்போதைய கலவரத்துக்கும் ஸலபிகள் மீது உடனடியாக குற்றம் சாட்டப்பட்டது அந்த குற்றசாட்டை பல சர்வதேச மீடியாக்கள் சமந்து வந்தன  அந்த கலவரத்துக்கு காரணமானவர்கள் தடை செய்யப்பட்ட ஹுஸ்னி முபாரக்கின் கட்சியான தேசிய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் என்று எகிப்து இராணுவம் உட்பட கொப்டிக் கிறிஸ்தவ தலைவர்களும் பின்னர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துரைத்துள்ள கலவரம் நடைந்த இம்பாபா பிரதேச ஸலபிகள் அமைப்பின் முக்கிய தலைவர் ஷெயிக் முஹமத் அலி இந்த கலவரத்துக்கு காடையர்கள் காரணம் என்றும் தாடிவைத்துள்ள எல்லோரும் ஸலபிகள் அல்லர் என்றும் கிறிஸ்தவர்களை நிந்திப்பதையும் அவர்களின் தேவாலையத்தை எரிப்பதையும் இஸ்லாம் தடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
அதேபோன்று எகிப்தின் ஸலபி அமைப்பின் பேச்சாளர் ஷெயிக் அல் கோம்ஹுரியா என்பவர் ஸலபிகளை புதிதாக அமைக்கப்பட்ட ‘புதிய முஸ்லிம்களுக்கு உதவும் கூட்டமைப்புடன்’ இணைத்து பார்க்கவேண்டாம் அதற்கும் எமக்கும் தொடர்புகள் எதுவம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த கலவரம் தொடர்பாக எகிப்து செய்தி தளம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ள எகிப்து இராணுவ அதிகாரி எகிப்தை உள்நாட்டு யுத்தம் ஒன்றுக்குள் திணிக்கும் சதி நாசவேலை ஒன்று இடம்பெற்று வருவதாக தமது தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் இந்த கலவரத்துடன் தொடர்புடைய முக்கிய இரண்டு சந்தேச நபர்களை இராணுவம் கைது செய்துள்ளது இதில் ஒருவர் இஸ்லாத்தை தழுவியதாக தெரிவிக்கப்பட்டும் பெண்ணின் யாசின் என்ற பெயர் கொண்ட முஸ்லிம் கணவர் மற்றையவர் அவரின் நண்பரான தேவாலையத்திற்கு அருகில் இருத்த வர்த்தக நிலையத்தில் இருந்து சுட்டவர் இவர் ஒரு கிறிஸ்தவர் என்று தெரிவித்துள்ளது.
அந்த முக்கிய சந்தேக நபர்கள் அல்லாத கலவரத்துடன் தொடர்புடைய முஸ்லிம் ,கிறிஸ்தவ நபர்கள் 150 க்கும் அதிகமானவர்கள் இராணுவத்தினால் கைதாகியுள்ளனர் இவர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவர் என்று இராணுவம் தெரிவித்துள்ளது இந்த கலவரத்தை இஹ்வானுல் முஸ்லிமீன் கண்டித்துள்ளது இந்த கலவரம் தொடர்பாக கருத்துரைத்துள்ள ஆய்வாளர்கள் இந்த கலவரத்திம் முக்கிய சூத்திர தாரிகளாக எகிப்திய ஸலபிகள் அமைப்பை சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றதாகவும் எனினும் இராணுவம் சரியான நேரத்தில் செயல்பட்டமையால் உண்மையான சூத்திரதாரிகள் சிகியுள்ளதாகவும் எகிப்திய தகவல்கள் தெரிவிக்கின்றது.
கடந்த சனிகிழமை எகிப்திய ஸலபிகள் அமைப்பும் இஹ்வானுல் முஸ்லிமீன்அமைப்பும் ஒன்றிணைத்து கலவரத்தை கண்டித்து  பேரணி ஒன்றையும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளது அங்கு உரையாற்றிய  ஸலபி அமைப்பின் முக்கிய பேச்சாளர்  ஸபாத் ஹிஸ்ஜான் Safwat Hegazy ‘ஒன்றுபட்ட அரபு நாடுகள் ஒன்றுபட்ட இஸ்லாமிய நாடுகள் உதையமாகிகொண்டிருகின்றது விரைவில் எங்கள் அனைவரையும் நிர்வகிக்கும் ஒரு கலிபாவை நாம் பெற்றுகொள்வோம்’ என்றும் தேவாலையத்தை எரித்தவர்கள் ஸலபிகளோ இஹ்வான்களோ எகிப்தியர்களோ அல்லர் அவர்கள் கலவரத்தை தூண்டும் எதிரிகள் என்று தெரிவித்துள்ளார்.

ஷெயிக் ஸபாத் ஹிஸ்ஜான் மற்றும் ஷெயிக் முஹமத் ஹஸ்சான்
பேரணியில்   50000 ஆயிரம் வரையான இரு அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இரு அமைப்பு க்களும் ஒன்றுதான் இரண்டின் இலக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளை அமுல் படுத்துவதுதான் என்ற கோசங்களை எழுப்பி பேரணியில் பங்குகொண்டுள்ளனர்.
வன்முறைகள் மத முரண்பாடுகள் பெற்றுக்கொண்டுள்ள புரட்சி வெற்றியை அழித்துவிட வெளிநாட்டு சக்திகளின் சதிநாச வேலை என்றும் தெரிவித்துள்ளார்   மொசாத் எகிப்தின் அரசியல் நகர்வுகளை முற்றிலுமாக குழப்பும் மறைமுக வேலைதிட்டங்களை ஆரம்பித்து விட்டதாக எகிப்திய செய்திகள் தெரிவிக்கின்றது மொசாட்டின் சதியில் ஸலபிகள் அமைப்பை சிக்கவைக்கும் நாசவேலைகள் ஆரம்பித்திருக்கலாம் மேலும் பல உண்மைகள் வெளிவரும்.
எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஒரு அரசியல் கட்சியாக  அரசாங்கத்தில் பங்குகொள்ளவுள்ளது தொடர்பாக கருத்துரைத்துள்ள இஸ்ரேலின் துணை வெளிநாட்டு அமைச்சர் டன்னி அய்லோன் எகிப்தில் அமையபோகும் எதிர்கால அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இஹ்வானுல் முஸ்லிமீன் இருப்பதை இஸ்ரேல கடுமையாக   எதிர்க்கும் என்றும் எகிப்தின் எந்தவொரு தேர்தலிலும் இஹ்வானுல் முஸ்லிமீன் பங்குகொள்ளவதை தடை செய்ய இஸ்ரேல்  வேலைசெய்யும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது இங்கு சுட்டிகாட்டதக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!