animated gif how to

சவூதி அரேபியா செல்ல இலங்கையருக்கு புதிய நடைமுறைகள்

May 22, 2011 |

May 22, 2011.... AL-IHZAN Local News

சவூதியிலுள்ள முகவர் ஒருவரின் துணையின்றி இலங்கையரை வேலை வாய்ப்புக்காக சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை செய்துள்ளது.

இதற்கான புதிய சுற்று நிருபமொன்றை பணியகம் இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முவர் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

சவூதி அரேபியாவிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் ஒருவரின் துணையின்றி தனிப்பட்ட முறையில் அங்கு தொழிலுக்கான விசாக்களை பெற்று இங்குள்ள வேலைவாய்ப்பு முகவர்களின் ஊடாக ஆட்களை அனுப்புவது இதன்மூலம் தடுக்கப்படுகிறது. சவூதி அரேபியா அரசின் அனுமதிபெற்ற வேலைவாய்ப்பு முகவர்கள் ஊடாக வரும் விசாக்களுக்கு மட்டுமே..... ஆட்களை அனுப்பமுடியும். அவ்வாறு வராத விசாக்களுக்கு ஆட்களை அனுப்ப முடியாது.

நீண்டகாலமாக சவூதி அரேபியாவின் வெளிநாட்டு தொழில்துறையில் ஏற்பட்டுவந்த சிக்கல்கள், பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக் கப்பட்டதாக பணியகத்தின் தலைவர் ரணவக்க தெரிவித்தார்.

சவூதி அரசினால் அங்கீகாரமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவரினால் அனுப்பப் படும் விசாவுக்கு ஆட்களை அனுப்பும் போது தொழில் வழங்குநரின் முழுமையான விபரம், விலாசம், வழங்கப்படும் கொடுப் பனவு, வேலை செய்ய வேண்டிய காலப் பகுதி, உட்பட முக்கிய தரவுகள் அனைத்தும் அறியக் கிடைப்பதுடன் தொழிலுக்காக செல்லும் நபருக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் உள்ளடக்கப்பட்ட வீசாவே இங்கு அனுப்பப்படும்.

தனிப்பட்ட முறையில் சவூதியிலிருந்து வரும் வீசாவுக்கு வேலை வாய்ப்புக்காக ஒருவர் செல்வதானால் சவூதியிலுள்ள இலங்கை தூதரகத்தில் தொழில் வழங்குநர் பற்றிய சகல விபரங்களையும் வழங்கு வதுடன் வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் வேறு சலுகைகள் பற்றிய முழு மையான விபரங்களடங்கிய ஆவண மொன்றை தயாரித்து விசாவுடன் இலங்கையில் தொழிலுக்காக செல்பவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் பின்னரே அவர் சவூதி அரேபியா செல்ல முடியும்.

சவூதி அரேபியாவிலுள்ள சகலரினதும் தனிப்பட்ட விபரங்களை அறியக்கூடிய இணையத்தள வலையமைப்பு வசதி சவூதியில் உள்ளது. இதன்பயனாக குறிப் பிட்ட இணையத்தை பரிசீலிப்பதன் ஊடாக தொழில் வழங்குநர்கள் தொடர்பான விபரங்களை இலங்கை தூதரகத்தினால் அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம் இலங்கையரை நம்பிக்கையாக பாதுகாப்பான உத்தரவாதமளிக்கப்பட்ட இடங்களில் வேலைவாய்ப்புக்கு அனுப்ப முடியும் எனவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!