May 07, 2011.... AL-IHZAN Local News
பேஸ்புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலம் எத்தனையோ நல்ல காரியங்கள் இடம்பெறத்தான் செய்கின்றன. அதே அளவுக்கு கூடாத காரியங்களும் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.
மிகவும் கேடு கெட்ட ஒரு நிகழ்வு கொழும்பு கல்கிசையில் அமைந்து இருக்கும் கல்கிசை ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்றது. கொழும்பில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலைகளில் பயிலும் ஆண்களும், பெண்களுமாக இளம் பிராயத்தினர் 200 பேர் வரையானோர் ஒன்றாக குடித்து கூத்தாடினார்கள்.
இவர்கள் பேஸ்புக் சமூக இணைப்பு இணையத்தளம் மூலம் அறிமுகமானவர்கள். இக்களியாட்ட வைபவத்துக்கு ஒவ்வொருவரும் தலா 1000 ரூபாய் செலவு செய்து இருந்தனர். பெற்றோருக்கு பொய்க் காரணங்களை சொல்லி விட்டு இக்களியாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
RSS Feed
May 07, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment