animated gif how to

நோயாளர் பதிவுகள் கணணியில்....

May 01, 2011 |

May 01, 2011.... AL-IHZAN Local News

சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நோயாளிகள் தொடர்பான தகவல்களை சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் கணணி மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
இதன் மூலம் ஒவ்வொரு நோயாளர்கள் குறித்த விபரங்களை மிக குறுகிய காலத்தில் பெறுவதுடன் அவர்களுக்கான சிகிச்சையையும் வழங்க முடியும். 
நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வருகை தரும் 
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் தொடர்பான மேலதிக 
விபரங்கள் உடனுக்குடன் கணணியில் பதிவு செய்யப்படும் 
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த திட்டம் தொடர்பான முதலாவது தொழில்பாடு 

நடவடிக்கைகள் கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 
பின்னர் இந்த முறைமை விரைவில் சகல 

அரசாங்க வைத்தியசாலைகளுக்கும்
 விஸ்தரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 
News: adaderana

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!