April 27, 2011.... AL-IHZAN World News
கெய்ரோ:எகிப்தில் இயற்றப்படவிருக்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை திருக்குர்ஆனாக இருக்கவேண்டும் என பெரும்பாலான எகிப்தியர்களும் வலியுறுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசு அமையவேண்டும் என எகிப்து நாட்டு மக்கள் விரும்புகின்றார்கள்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ப்யூ ரிசர்ச் செண்டர் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இச்செய்தினை அஸோஸியேட் ப்ரஸ் வெளியிட்டுள்ளது.இஸ்ரேலுக்கு ஆதரவாக 32 ஆண்டுகளுக்கு முன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்துஸ் செய்யவேண்டுமென 54 சதவீத எகிப்து நாட்டு மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மீதும், அந்நாட்டு அதிபர் ஒபாமா மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என 64 சதவீத எகிப்திய மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடை பெறவிருக்கவே இந்த ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன. எகிப்தின் பல்வேறு பகுதிகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
0 கருத்துரைகள் :
Post a Comment