animated gif how to

உலகை உலுக்கும் 6 பூகம்பங்கள் இம்மாதத்தில் ஏற்படலாம் - இலங்கை எச்சரிக்கிறது

April 07, 2011 |

April 07, 2011.... AL-IHZAN Local News

உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது. 

உலகளாவிய ரீதியில், பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய 5 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும், அது இலங்கைலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

பேராதனைப் பல்கலைக்கழத்தின் புவியியல் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நிபுணர்கள் குழுவே இந்த ஆய்வை மேற்கொண்டது. 

இதன்போதே ஏப்ரல் 3ம் நாளுக்கும் 10ம் நாளுக்கும் இடையில் ஜப்பானிலும், ஏப்ரல் 6ம் நாளுக்கும் 10ம் நாளுக்கும் இடையில் சீனாவிலும், ஏப்ரல் 10ம் நாளுக்கும் 15ம் நாளுக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியுசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

அத்துடன் ஜப்பானில் ஏப்ரல் 16ம் நாளுக்கும் 20ம் நாளுக்கும் இடையில் மீண்டும் பூகம்பம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.  இந்தோனேசியாவில் ஏற்படக் கூடிய பாரிய பூகம்பத்தினால் இலங்கைலும் அதன் பாதிப்பு உணரப்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

ஏற்கனவே 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி இலங்கைல் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!