March 15, 2011.... AL-IHZAN Local News
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன. கட்சிகள் சுயேச்சை குழுக்கள் நேற்று தமது இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டன புத்தளம், மட்டகளப்பு, அம்பாறை, போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் கட்சிகள் இறுதி பிரசாரத்தில் தீவிரமாக ஈடு பட்டிருந்தது அறிவிக்கபடுகின்றது
கிண்ணியா நகர சபைக்கு போட்டிடும் கண்ணாடி சின்னத்திலான ஜமாஅதே இஸ்லாமி உறுபினர்களை கொண்ட சுயேச்சை அணியும் தனது பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டுள்ளது தேர்தல் பிரசாரப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சுவரொட்டிகள், தேர்தல் அலங்காரங்கள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடாத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு 16ஆம் திகதி இரவு வரை கட்சி அலுவலகங்களைத் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளுராட்சி சபைத் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் 385ஆக உயர்வடைந்துள்ளதாக சுகந்திரமானதும் நீதியானதுமான தோதலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment