animated gif how to

லிபியாவின் மீதான அமெரிக்க கூட்டுப் படையினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம்

March 20, 2011 |

March 20, 2011.... AL-IHZAN World News

திரிபோலி:லிபிய அதிபர் கத்தாஃபியை ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு இதுவரை அது கை கூடவில்லை. தற்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொண்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒப்புதல் பெற்றது. இந்தன தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை.
இந்த ஒப்புதல் கிடைத்ததும் அதிரடியாக அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து விமானத் தாக்குதலை நடத்தியுள்ளன.போர் விமானங்கள் மூலமும்,ஏவுகணைகளை வீசியும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்காவிரிவாக
ஈராக் போருக்குப் பின்னர் தற்போது லிபியாவில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது அமெரிக்கா.
ரேடார்கள், ஏவுகணைகள், தகவல் தொடர்பு மையங்களை ஆகியவற்றை குறிவைத்து ஏவுகணைகளை சரமாரியாக செலுத்தி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. லிபியாவின் கடல் பகுதியில் நிறுத்தி வைத்துள்ள தனது கடற்படைக் கப்பல்களிலிருந்தபடி இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்கா.
மிசுரடா, சுர்த் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது.
“அமெரிக்காவின் செயல் காட்டுமிராண்டித்தனமானது. அத்துமீறிய தாக்குதல் இது. அப்பாவி மக்களையும், கட்டடங்களையும் இது கடுமையாக பாதித்துள்ளது” என்றார் லிபிய நாடாளுமன்ற சபாநாயகர் முஹம்மது சுவேத்.
இந்த வி்மானத் தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது தெரியவில்லை. 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிகிறது.
இந்த தாக்குதலுக்கு பிரெஞ்சுப் படையினர் தலைமை தாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா கண்டனம்
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர. இது அத்துமீறிய தாக்குதல் என்று அவை வர்ணித்துள்ளன.
வெனிசூலாவும் இதைக் கடுமையாக கண்டித்துள்ளது. இன்னொரு நாட்டின் மீது எப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம். இது அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வெனிசூலா அதிபர் சாவேஸ் கூறியுள்ளார்.
ஈராக் போருக்குப்பின் தனது இராணுவ தளத்தை அரபு நாடுகளில் நிறுவுவதற்கு லிபியாவின் புரட்சியை சாதகமாக்கி கொண்டுள்ளது அமெரிக்கா. லிபியாவின் வடபகுதிகள் எண்ணெய் வளம் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!