animated gif how to

அஸ்மா பாதிமா என்ற பாகிஸ்தான் சகோதரிகள் !!

March 01, 2011 |

March 01, 2011.... AL-IHZAN Local News

பாகிஸ்தானிய யுவதிகளான அஸ்மா , பாத்திமா என்ற இரு சகோதரிகள் தமது பெற்றோர் தம்மை  கொடுமைப்பத்துவதா கூறி தற்போது இலங்கையில் தங்கியுள்ளனர் இந்த இரண்டு பேரும் அவர்களின் பெற்றோரிடமிருந்து தப்பி இலங்கையில் தஞ்சம் கோரி வந்திருப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தமது பெற்றோர் தம்மை கொடுமைப்படுத்துவதாக கூறியே அவர்கள் இலங்கையில் அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள் என்றும் இவர்களுக்கு வெளிநாடுகளில் புகலிடம் வழங்க சிராரிசு செய்யும்  சான்றிதழ் ஒன்றையும் ஐநா மனித உரிமைகள் அலுவலங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது தாம் பாகிஸ்தானியர்கள் என்றும் தாம் அபூதாபில் பிறந்ததாகவும் தமது 8 மற்றும் 6 வயதுகளில் பாகிஸ்தான் வந்ததாகவும் அங்கு தமக்கு வதைகள் ஆரம்பமானதாகவும் தெரிவிகின்றனர் இவர்களின் தந்தை பாகிஸ்தானில் ஒரு இராணுவ பொறியலாளர் என்றும் தாய் பாகிஸ்தான் மகளிர் கிளம் ஒன்றின் தலைவர் என்றும் இவர்களின் குடும்பம் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்கு பெற்ற குடும்பம் என்றும் அறிய முடிகின்றது விரிவாக
இவர்கள் தொடர்பாக இலங்கை ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ள தகவல்களில் இருவரும் பெற்றோரின் மத ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்து தப்பிவந்துள்ளதாகவும் இந்த இரு யுவதிகளும் ஏதீஸ்ட் இறைவன் பற்றிய நம்பிக்கை அற்றவர்கள் என்றும் இவர்களுக்கு எதிரான கொடுமைகள் மத அடிப்படையாக கொண்டது என்றும் இவர்களின் தாய் மற்றும் உறவினர் இலங்கையில் முன்னாள் கொழும்பு மாநகர சபை தலைவர் ஆசாத் சாலியின் உதவியுடன் இவர்களை அழைத்து செல்ல முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது
இவர்களின் தாயார் இலங்கையின் சுற்றுல்லா போலீஸ் பிரிவில் தமது குழந்தைகளை காணவில்லை என்று கூறி உதவி கோரியுள்ளார் இதை தொடர்ந்து இவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனினும் இவர்கள் வெளிநாட்டவர்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ள சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் தற்போது நீதிமன்றம் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சில முஸ்லிம் பெற்றோர்கள் தாம் முழுமையாக மேற்கு வாழ்க்கை முறைகளுக்கு முழுமையாக உட்பட்டு வாழ்வதுடன் குழந்தைகளையும் மேற்கு வாழ்க்கை முறைகளுக்கு முழுமையா உட்படும் கல்வி , கலை , பொது வாழ்க்கை என்பன வற்றுக்கு உட்படுத்தி வாழ கற்பிகின்றனர் இதன் காரணமாக குழந்தைகள் பருவ வயதை அடைந்ததும் பெற்றோரின் அரவணைப்பை விட்டும் துரமாக முற்படும் போது பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாது இஸ்லாமிய போதனைகளுக்கு மாற்றமாக அவர்களை அல்லாஹ்வின் பெயரால் , இஸ்லாத்தின் பெயரால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் இதன் ஒரு விளைவாக குழந்தைகள் இஸ்லாத்தையும் வெறுத்து பெற்றோரையும் வெறுத்து வாழ முற்படுகின்றனர்
30-40 வயதில் இருக்கும் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு முழுமையான மேற்குலக கல்வியை பெரும் தொகை கொடுத்து வழங்கிவருகின்றனர் இவர்கள் 50 -55 வயதாகும்போது மேற்குலக கல்வியை முழுமையாகக் கற்றுக்கொண்ட குழந்தைகள் பெற்றோரை விட்டு விலக ஆரம்பிக்கின்றனர் இதன் போது உணர ஆரம்பிக்கும் பெற்றோர் சிலர் சற்று இஸ்லாத்தின் பக்கம் தாம் திரும்புவதுடன் இஸ்லாம் தெரியாமையால் குழந்தைகளை மிகவும் கடுமையைக அடக்க முற்படுகின்றனர் இதன் விளைவுகளைத்தான் ஆஸ்மா பாத்திமா போன்றவர்களின் சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றது.
எமது நாட்டிலும் இதேநிலைதான் இலங்கையிலும் இஸ்லாத்தின் எந்த பெருமானங்களையும் கருத்தில் கொள்ளாத முஸ்லிம் பெற்றோர் சிலர் தமது பெண் குழந்தைகளையும் அரை கவுனுடன் சர்வதேச பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர் இந்த நிலையை கொழும்பிலும் , கண்டியிலும் வேறு சில நகரங்களிலும் காணமுடியும் இதன் விளைவுகள் அஸ்மா களாகவும், பாத்திமாகளாகவும் வரலாம்.
News:-Lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!