animated gif how to

Facebook சமூக வளைத்தள வாலிபர்களுக்கு பாராட்டுகள் !

February 16, 2011 |

February 16, 2011.... AL-IHZAN Local News


இன்று அல்லாஹ்வின் தூதரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சக்தி டிவி ஒளிபரப்பாக்க தீர்மானித்திருந்த ‘ பொக்கிஷம்’ என்ற தமிழ் திரைப்படம் முஸ்லிம் வாலிபர்கள் சமூக வளைத்தளம் Facebook மூலம் மேற்கொண்ட முயற்சியால் அந்த குறித்த திரைப்படத்தை சக்தி டிவி ஒலிபரப்புவதில்லை என்று நிறுத்தியுள்ளது என்பதை சமூக வளைத்தள தகவல்களின் ஊடாக அறிய முடிகின்றது.
கடந்த சில மாதங்களாக Facebook சமூக வளைத்தளத்தில் ‘இஸ்லாமிய பெருநாள் தினங்களில் பெருநாளின் பெயரை பயன்படுத்தி திரைப்படம் போடப்படுவதை எதிர்போம்’  என்ற விடய பக்கத்துக்கு ஆதரவாக 3500 வரையான ஆதரவாளர்கள் இணைந்ததுடன் அது தொடர்பான கருத்து பரிமாற்றங்களையும் நடத்திவந்தனர் நேற்றும் இன்றும் முஸ்லிம் வாலிபர்கள் குறிப்பாக Facebook சமூக வளைத்தளம் பயன்படுத்தும் உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சியால் ‘பொக்கிஷம்’ என்ற தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டது.
இது ஒரு சிறந்த முயற்சியாக கருதப்படவேண்டியதுடன் இதனுடன் தொடர்புடையவர்கள் பாராட்டுக்கும் உரித்தானவர்கள் இஸ்லாமிய பெருநாட்கள் இஸ்லாத்தின் தூதை மக்கள் தவறாக விளங்கிக்கொள்ள வழிவகுக்கும் இவ்வாறான திரைப்பட ஒளிபரப்புகள் ஏற்றுகொள்ள முடியாதவை என்பதை சமூக வளைத்தளம் தொடர்புகளின் ஊடாக வாலிபர்கள் வெளிப்படுத்திவருவது பாராட்டுக்குரியது.என்பதுடன் உணர்வுகளை புரிந்து கொண்டு சக்தி டிவி பெருமிதத்துடன் குறித்த திரைப்படத்தை ஒலிபரப்புவதில்லை என்று நிறுத்தியமையும் பாராட்டுக்குரியது. அதேவேளை இன்று வசந்தம் டிவி யில் தமிழில் டாக்டர் சாகிர் நாயிகின் இஸ்லாமிய உரை இடம்பெற்றது என்பதும் குறிபிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!