animated gif how to

‘தப்பபிப்பிராயம்’ உருவாகாது முஸ்லிம்கள் நடந்துகொள்ள வேண்டும்

February 27, 2011 |

February 27, 2011.... AL-IHZAN Local News

சிங்கள, தமிழ் மக்களைப் போலவே முஸ்லிம்களும் நாட்டுப்பற்றுள்ளவர் களாகச் செயற்பட்டு பிறந்த மண்ணுக்கு விசுவாசமாக நடக்க வேண்டும். பிறந்த நாட்டை நேசிக்குமாறு நபி (ஸல்) அவர்களும் போதித்துள்ளார்கள். விளையாட்டுத் துறையாக இருந்தாலும் நமது நாட்டுக்கே நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடை யிலான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக் கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது இந்திய முஸ்லிம்கள் இந்தியாவையே ஆதரிக்கின்றனர். பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிகளின் போது பங்காதேஷ் நாட்டவர் பங்களாதேஷ¤க்கே ஆதரவு தெரிவிக்கின்றனர்.
வேறுநாடுகளுடன் நாம் நட்புறவு வளர்க்கலாம். ஆனால், விளையாட்டுக் காகவாவது முஸ்லிம்கள் வேறு நாட்டை ஆதரிக்கக் கூடாது. இலங்கையையே ஆதரிக்க வேண்டும்.
எந்த விதத்திலும் எம்மீது ஏனையவர்கள் தப்பபிப்பிராயம் சொல்லாத வகையில் நடக்க வேண்டியது. இக்காலகட்டத்தில் மிக முக்கியமாகும். சகல முஸ்லிம்களும் இதனை கருத்திற்கொண்டு செயற்படுமாறு கோருகிறோம்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல்கள் என்பனவும் இதனை தெளிவாக விளக்கியுள்ளன எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!