February 27, 2011.... AL-IHZAN Local News
அநுராதபுர முஸ்லிம்களின் அவலநிலை நூறுக்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களையும் மஸ்ஜிதுக்களையும் பாடசாலைகளையும் கொண்டுள்ள அனுராத புர மாவட்டத்தில் 42000 வாக்காளர்களும் உள்ளபோதும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியோ அல்லது போதுமான மாகான சபை பிரதிநிதிகளோ இல்லாமை சுட்டிகாட்டப் படுகின்றது.
இங்கு வாழும் முஸ்லிம்கள் போதுமான விழிப்பூட்டல் இன்றி இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது இங்கு முஸ்லிம்கள் மிக குறைந்த அளவில் அரச அதிகாரிகளாக , ஆசிரியர்களாக இருப்பதுடன் பிரதான பதவிகளில் எவரும் இல்லாத நிலையம் கானப்படுவதாகும் சில கிராமங்களில் மத்ரஸாக்கள் இயங்குகின்றபோதும் அங்கு போதுமான ஆசிரியர்கள் குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது இது தொடர்பாக எமது lankamuslim.org அனுராதபுர செய்தியாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது விரிவாக படித்தவர்கள் இஸ்லாமிய கல்வியை பூர்த்தி செய்து பதவிகளை பெற்றவர்கள் ஊரை விட்டும் வெளியேறி கொழும்பு போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கும் ஊருக்கும் இடையான உறவு மிகவும் மட்டுப்படுத்த பட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
அநுராதபுர பிரதேசத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைகளை இஸ்லாமிய அமைப்புகள் குறிப்பாக ஜமாஅதே இஸ்லாமி அமைப்பு செய்து வந்தாலும் அது போதுமானதாக இல்லை என்றும் வன்னி மாவட்ட முஸ்லிம்கள் அநுராதபுர முஸ்லிம் வாக்காளர்கள் தொகைக்கு சமமாக வாக்கு வங்கியை கொண்டு மூன்று பாராளுமன்ற பிரதிநிதிகளை வெள்ளமுடியுமானால் ஏன்vஅநுராதபுர முஸ்லிம் வாக்காளர் வாக்கு வங்கியை பயன்படுத்தி அதனை செய்யமுடியாதுள்ளது ? என்ற கேள்விக்கு தீர்வாக எந்த விழிப்பூட்டல் நடவடிக்கைகளும் மேற்கொள்ள படாத நிலையில் முஸ்லிம் வாக்கு வங்கி பயனற்று இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
News:-Lankamuslim
0 கருத்துரைகள் :
Post a Comment