animated gif how to

ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக இறுதிப் போராட்டம்

February 05, 2011 |

February 05, 2011.... AL-IHZAN World News
எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக உச்சக்கட்டத்தை அடைந்துள்ள மக்கள் திரள் போராட்டத்தில் எகிப்து புரட்சியின் மையமாக விளங்கும் தஹ்ரீர் சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் சங்கமித்துள்ளனர்.

முபாரக் உடனடியாக வெளியேற வேண்டும், பதவியை ராஜினாமாச் செய்யாமல் நாங்கள் பின் வாங்கமாட்டோம் ஆகிய அட்டைகளை சுமந்தவாறு எகிப்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில்ல் குதித்துள்ளனர் அந்நாட்டு மக்கள்.

முபாரக்கிற்கு கொடுத்த கெடுவின் கடைசி தினமாகும் இன்று. முபாரக் வெளியேறும் நேரம் வந்துவிட்டது என பிரபல அரசியல் ஆர்வலரான ஜிக்ரி இப்ராஹீம் அல்ஜஸீராவிடம் தெரிவித்துள்ளார்.

முப்பது ஆண்டுகளாக அதிபர் பதவியில் தொடரும் முபாரக்கின் ராஜினாமாவைக்கோரி வெள்ளிக்கிழமை விடைபெறும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு பிரம்மாண்டமான பேரணி நடத்த எதிர்கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு போராட்டம் துவங்கியது. சில இடங்களில் போலீசாரும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஹ்ரீர் சதுக்கத்திற்கு வருகைப் புரிந்த எகிப்து நாட்டு பாதுகாப்பு அமைச்சர் முஹம்மது ஹுஸைன் தன்தாவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், ராணுவ கமாண்டர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முதன்முறையாக போராட்டத்தின் நெருப்பு கனன்றுக் கொண்டிருக்கும் தஹ்ரீ சதுக்கத்தில் ஒரு அமைச்சர் வருகை தருவதாகும். சதுக்கத்தில் அமைச்சர் வருகை தந்துள்ளார் என்பதை அறிந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். முன்னர் ராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் இணைந்துள்ளனர் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்துதான் அமைச்சரின் வருகை.

இதற்கிடையே அரபுலீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தஹ்ரீர் சதுக்கத்திற்கு வருகைத் தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்ததாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது .

எகிப்தின் அனைத்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!