animated gif how to

யெமன் நாட்டில் போராட்டம் உச்சக்கட்டம்

January 31, 2011 |

January 31, 2011.... AL-IHZAN World News
யெமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி நடைபெறும் மக்கள் திரள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.தலைநகரான ஸன்ஆவில் எகிப்து நாட்டு தூதரகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்ட புரட்சியாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஆனால் எவரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.
சர்வாதிகாரி ஸாலிஹ் ராஜினாமாச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என யெமன் நாட்டின் பிரபல பெண் தலைவரான தவக்குல் கர்மான் அறிவித்துள்ளார்.

யெமன் நாட்டின் தெற்கு பகுதியில் ஜனநாயகவாதிகளும், வடக்கு பகுதியில் ஷியா புரட்சியாளர்களும், பாராளுமன்ற எதிர்கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகின்றனர் என தவக்குல் கர்மான் தெரிவித்தார்.

இஸ்லாமிய கட்சியான அல் இஸ்லாஹ் மற்றும் யெமன் நாட்டின் பிரபல மனித உரிமை அமைப்பின் தலைவர்தான் தவக்குல் கர்மான். யெமன் நாட்டில் 1978 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் தொடரும் ஸாலிஹின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகத்தான் மக்கள் திரள் போராட்டம் நடந்துவருகிறது.

செய்தி:மாத்யமம்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!