January 27, 2011.... AL-IHZAN World News
எகிப்தில் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடந்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் வறுமை அதிகரிப்பதாகவும், ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை தொடர்வதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
தலைநகரான கெய்ரோவில் ஆளுங்கட்சியான நேசனல் டெமோக்ரேடிக் கட்சியின் தலைமையகத்தின் முன்பு பிரமாண்டமான போராட்டம் நடைப்பெற்றது. போராட்டங்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஜனநாயக-மனித உரிமை இயக்கங்களின் அழைப்பைத் தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது. ஆனால், தங்களின் உறுப்பினர்கள் தனிப்பட்டரீதியில் போராட்டங்களில் கலந்துக் கொண்டிருக்கலாம் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
செய்தி:மாத்யமம்
எகிப்தில் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடந்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் வறுமை அதிகரிப்பதாகவும், ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை தொடர்வதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
தலைநகரான கெய்ரோவில் ஆளுங்கட்சியான நேசனல் டெமோக்ரேடிக் கட்சியின் தலைமையகத்தின் முன்பு பிரமாண்டமான போராட்டம் நடைப்பெற்றது. போராட்டங்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஜனநாயக-மனித உரிமை இயக்கங்களின் அழைப்பைத் தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது. ஆனால், தங்களின் உறுப்பினர்கள் தனிப்பட்டரீதியில் போராட்டங்களில் கலந்துக் கொண்டிருக்கலாம் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
செய்தி:மாத்யமம்
RSS Feed
January 27, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment