animated gif how to

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இஸ்லாமிய நோக்கியில் அணுகப்படவேண்டும்

January 25, 2011 |

January 25, 2011.... AL-IHZAN Local News

M.ஷாமில் முஹம்மட்
வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிகொண்டுள்ளது நேற்று வெளியான ஒரு தகவலின் பிரகாரம் 1990 ஆம் ஆண்டு புலிகளின் பயங்கரவாத வெளியேற்றத்தின் பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒரு பகுதியினரை கிளிநொச்சியில் மீள் குடியேற்றுவது தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் மௌலவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றது இது தொடர்பாக எமது  செய்தியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள தகவல்களின் பிரகாரம்.

யாழ்ப்பாணத்தில் இதுவரை 400 உட்பட்டதும் 350 க்கு மேற்பட்டதுமான குடும்பங்கள்தான் மீள் குடியேறியுள்ளது அவர்கள் பெரும்பாலும் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இவர்களின் 50 க்கு குறைவானவர்கள் மட்டும்தான் மீள் குடியற்ற நடவடிக்கைகளுக்காக காணிகள் வழங்கபட்டுள்ளது அதுவல்லாமல் யாழ்பாணத்தில் தம்மை பதிவு செய்து கொண்ட குடும்பங்களாக 1800 வரையான குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. விரிவாக

இந்த நிலையிலான யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் போதிய கவனத்தை பெறாமலும் கவனத்தை பெற்றாலும் அர்த்தபுஷ்டியான மீள் குடியேற்றம் நடைபெறாமலும் முஸ்லிம்களும் சமூக நிறுவனங்களான மஸ்ஜிதுகள் பாடாசலைகள் சரிவர இயங்க முடியாஆளவு மீள் குடியேறும் மக்களின் தொகை போதாமை இருக்கும் நிலையில் புதிதாக புதிய ஒரு பிரதேசத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒரு தொகுதியினரை கொண்டு போய் மீள் குடியேற்ற முயற்சிப்பது அர்த்தமற்றது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு கண்டிப்பாக மீள் குடியேறி தமது சமூக நிறுவனங்களை மீண்டும் இயக்கம் பெறச் செய்யவேண்டும்.
மீண்டும் இயக்கம் பெறச் செய்யவேண்டும் என்பது ஒரு இஸ்லாமிய கடமையாகும் இதற்காக அவற்றை இயக்கம் பெறச் செய்ய போதுமான மக்கள் தொகை கண்டிப்பாக மீள் குடியேறவேண்டும் அதேவேளை தற்போது அவர்களில் வாழும் பிரதேசங்களின் முஸ்லிம் சமூக நிறுவங்களை குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு இவை இரண்டையும் பாதுகாக்கும் நோக்கில் வடக்கு முஸ்லிம் சமுகம் செயல்படவேண்டியது இஸ்லமிய கடமையாகும்
முஸ்லிம் மீள் குடியேற்றம் நடைபெறவேண்டும் பறிபோன முஸ்லிம்களின் அனைத்தும் மீண்டும் முஸ்லிம்களின் கைகளுக்கு மீண்டும் வரவேண்டும் அவை தொடர்ந்தும் பாதுகாக்கப் படவேண்டும் அதேவேளை கடந்த 20 வருடங்களாக புத்தளம் போன்ற பகுதிகளில் பல புதிய கம்பீரமான முஸ்லிம் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது அவைகளும் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தும் பாதுகாக்கப் படவேண்டும்.
இந்த பகுதிகளிலுள்ள முஸ்லிம் கிராமங்களை பாதுகாப்பதும் முஸ்லிம்களின் இருப்பை பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாகும் ‘மீள் குடியேற்றம் , தற்போது வாழும் இடங்களை பாதுகாத்தல்’ ஆகியன இன்று வடக்கு வடமேற்கு , கிழக்கு முஸ்லிம் சமுகம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளாகும் இந்த விடையத்தில் பல தீர்வு காணப்படவேண்டிய பல உப பிரச்சினைகள் உண்டு அவைகள் இந்த பிரதான பிரச்சினையின் உட்பிரிவுகளாக கையாளப்பட்டு இஸ்லாமிய அணுகுமுறைகளின் ஊடாக தீர்வுகளை நோக்கி நகரவேண்டும் புதிய பிரதேசத்தில் காணிகளை இனம் கண்டு மீள் குடியேற்றம் என்ற பெயரில் மீட்டும் ஒரு அவலத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் வழிகாட்டக் கூடாது.
‘மீள்குடியேற்றம் தற்போது வாழும் இடங்களை பாதுகாத்தல்’ பிரதேசவாதமற்ற முழுமையான இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அணுகப்படவேண்டும் பிரதேசங்களின் நலன் என்ற பெயரில் இஸ்லமிய விரோத பிரதேசவாதம் தலை தூக்குவதை முஸ்லிம் உம்மாஹ் அனுமதிக்கக் கூடாது.
குற்றங்கள் நிகழும்போது குற்றவாளியை குற்றவாளியாகமட்டும் பார்க்கவேண்டும்   அவன் சிங்களவனா , தமிழனா , முஸ்லிமா என்று பார்ப்பது எப்படி இஸ்லாம் ஏற்றுகொள்ளாதோ  அதேபோன்று ஒரு குற்றம் நிகழும்போது குற்றம் செய்பவன் எந்த பிரதேசத்தை சேந்தவன் என்று பார்ப்பதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை   குற்றம் செய்தவனை குற்றவாளியாக மட்டும் பார்க்க வேண்டும் அதைத்தான் இஸ்லாம் போதிக்கின்றது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!